பக்கம்:வைணவ உரைவளம்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 31 1 நீர்களோ நீங்கள்? ஈசுவரனும் ஈசுவர விபூதியும் வைஷ்ணவ னுக்குக் கிஞ்சித்கரிக்க இருக்க, வைணவனுமாய் ஒருவனு மில்லாதானுமா யிருப்பானொருவனை (திக் கற்றவனை) நீங்கள் எங்ங்னே தேடிப் பெறுவீர்கள்?' என்றாராம். இந்த இதிகாசம் இங்கு எதற்காக அருளிச் செய்யப் பட்டதென்னில்; உத்தமர்கட்கு என் செய்வாரே என்ற இடத்திற்கு வியாக்கியானம் அருளிச் செய்யா நின்ற நம்பிள்ளை, ஈசுவரன் தன்னையும் தன் விபூதியையும் ததீய சேஷமாக்கியிறே வைப்பது' என்று அருளிச் செய்தார்: அவ்வர்த்தித்துக்கு ஆப்த சம்வாதமாக ஆழ்வானுடைய வார்ததையை உதாகரிக்க வேண்டி இந்த ஐதிகத்தை அருளிச் செய்தார் என்க. ஈசுவரன் தன்னையும் தன் விபூதியையும் ததீய சேஷமாக்கி வைக்கிறான்' என்கின்ற இதனை அருளிச் செய்யத்தான் மூலத்தில் என்ன ப்ரசக்தி யுள்ளதென்னில்:ஊன் மல்கு மோடு பருப்பார் உத்தமர்க்கு என் செய்வாரே என்றதில் தொனிக்கும் பொருள் அது. உத்தமர்க்கு எம்பெருமானே தானும் தன் விபூதியுமாய்க் கிஞ்சித்கரிக்க ஸஜ்ஜனாயிருக்க, சில பாபிகள் அந்தப் பாக்கியம் இழந்தார்களாவதே!' என்ற அநுதாபத்தின் மேல் அது வக்தவ்யமாயிற்று. Té6 வார்புனல் அந்தனண் அருவி வடதிரு வேங்கடத் தெந்தை பேர்பல சொல்லிப் பிதற்றிப் பித்தரென் றேபிறர் கூற ஊர்பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்ககின் றாடி ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படு வாரே.22 2. பிரதிபத்தி-சம்ஸ்காரம்: தகனம் செய்தல். 22. திருவாய். 3.5;8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/334&oldid=921053" இலிருந்து மீள்விக்கப்பட்டது