பக்கம்:வைணவ உரைவளம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 5 தஞ்சீரை ஞானியர்கள் தாம்புகழும் வேதரங்தி நஞ்சீயர் தாம்பட்டர் நல்லருளால்-எஞ்சாத ஆர்வமுடன் மாறன் மறைபொருளை ஆய்ந்துரைத்த தேயொன் பதினா யிரம்." என்பர் மணவாள மாமுனிகள். பிரம்மசூத்திரத்திற்கு இராமாதுசர் அருளிச் செய்த ரீபாஷ்யம் ஒன்பதினாயிரம் கிரந்தங்களையுடையதாதலின் அத் தொகையளவில் ஒன்பதினாயிரப்படி’ என்னும் இவ்வியாக்கியானம் எழுந்தது. இதுபற்றிய ஒரு கவையான் வரலாறு உண்டு.4 பன்னீராயிரப்படி : இதனை அருளிச் செய்தவர் வாதிகேசரி அழகியமணவாள சீயர். அன்போ டழகி யமனவா ளச்சீயர் பின்போருங் கற்றறிந்து பேசுகைக்காத் -தம்பெரிய போதமுடன் மாறன் முறையின் பொருளுரைத்த தேதமில்பன் னிரா யிரம்." என்பர் மணவாள மாமுனிகள். பாகவதம் பன்னிராயிரம் கிரந்தங்களையுடையதாதலின், அத்தொகையளவில் இவ் வியாக்கியானம் எழுந்தது. இந்த ஆசிரியரைப்பற்றியும் ஒரு சுவையான வரலாறு உண்டு. முன்புள்ள பெரி யோர்கள் அருளிச் செய்த வியாக்கியானங்களையெல்லாம் கண்டு, அவற்றின் சாரமான பொருட்சிறப்புகளையெல் லாம் சுருக்கி, எல்லார்க்கும் எளிதாகவும் விளக்கமாகவும் 3. உ. ர. மா-42. 4. திருவாய் மொழி-ஈட்டின் தமிழாக்கம்-பகுதி-1 பக். (38-37) காண்க. 5. 2ー。ロ・ Lpfrー45。 6. திருவாய்-ஈட்டின் தமிழாக்கம்-பகுதி-1 பக் (39-39.) இது இரு பத்து நாலாயிரமபடி. முப்பத்து ஆறாயிரப்படி என்னும் வியாக்கியான ங் கட்குக் காலத்தாற் . பிற்பட்டது. எண் வரிசை ஒநாக்கி இங் த மூன்றாவதாக எழுதப் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/34&oldid=921064" இலிருந்து மீள்விக்கப்பட்டது