பக்கம்:வைணவ உரைவளம்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 3;了 கிருஷ்ணனுடைய நீர்மை இல்லையே சக்கரவர்த்தித் திரு. மகனுக்கு" என்ன, அதுவோ பெருமாள் தூது போகாமை யன்று காண்; இட்சுவாகு வமிசத்தினரைத் துரதுபோக விடுவார் இல்லாமை காண்’ என்று அருளிச் செய்தார். ‘எம்பெருமானார் திருவாராதனம் பண்ணிப் போருவது வெண்ணெய்க் காடும் 'பிள்ளையன்றோ? இங்ங்னம் இருக்க வும் ஒரு நாள் ஒரு பூரீவைஷ்ணவர் சக்கரவர்த்தித் திரு மகனை எழுந்தருளப் பண்ணிக்கொண்டுவந்து கொடுத்தா ராய் அவரைப் பார்த்து என் ஒருவனையே சரணமாகப் பற்று" என்று தேவையிடாதார்'2 எழுந்தருளினார் என்றா ராம். ஆபிமுக்கியத்தாலே பெறலாம் என்றால், அவ்வாபிமுக்கியந்தானும் பரம பக்தியைப் போன்று அரிதா யிருக்குமன்றோ இச்சேதநனைப் பார்த்தால். எஇத்தலையில் ஆபிமுக்கியத்திற்கு மேற்பட வேண்டா' என்று சொல்லுகிறவை யெல்லாம், பற்றப்படுகின்ற சர்வேசுவரனுடைய நீர்மையைப் பற்றச் சொல்லுகிறது: இவனுக்கு வேண்டுவன சொல்லப்புக் கால் மகாவிசுவாசம் முன்னாக' என்ன வேண்டும்படியாக இருக்குமன்றோ? *ஒரு சிறாயை' நம்பி ஆறுமாதங்கட்கு வேண்டும் சோறும் தண்ணிரும் ஏற்றிக் கொண்டு கடலிலே இழியா நின்றான்; அதைப் போன்ற விசுவாசமாகிலும் வேண்டாவோ பகவத் விஷயத்தைப் பற்றுவார்கட்கு' என்று அருளிச் செய்வர். 31. வெண்ணெய்க்காடும் பிள்ளை-கிருஷ்ணன். 32. தேவையிடாதார் - விதிக்காதவர்; பூரீராம լՋprrr65r 33. ஆயிமுக்கியம் - எதிர்முகமாயிருக்கும் தன்மை; அநுகூலமாயிருத்தல் என்றபடி, அபிமுகம்எகிர்முகம். 34. சிறாய்-கப்பல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/340&oldid=921066" இலிருந்து மீள்விக்கப்பட்டது