பக்கம்:வைணவ உரைவளம்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3霍2 வைணவ உரைவளம் கஞ்சீவர்:அப்படி ஒரு நிர்ப்பந்தம் இல்லல' என்றுசொல்லிக் கொண்டே நம்பிள்ளையை வரவழைத்து, இவனுக்குப் பாங்கானபடி ஓர் திருவாய்மொழி சொல்லும்' என்று நியமித்தருளுகின்றார். நம்பிள்ளையும் ஆசாரியாரின் நிய மனத்தைத் தலைமேற்கொண்டு அப்படியே அருளிச் செய்து வருகின்றார். இத்திருவாய்மொழியளவும் கேட்டு வந்த பிள்ளை யாத்தான் பாகவதர்களின் பெருமை இப்படியன்றோ இருப்பது?' என்று தேறி, அதுவரையிலும் தாம் இருந்த நிலைமைக்கு மிகவும் வருந்தி, அன்று முதல் நம்பிள்ளையிடத்தில் அளவு கடந்த பக்தி காட்டப்புகு கின்றார்; நம்பிள்ளை அதற்கு இசையாதொழிகின்றார். உடனே அவர் நஞ்சீயரிடம் சென்று, பாகவதரின் பெருமை தெரியாமல் முன்பு அப்படிச் சொன்னேன்; பொறுத்தருள வேண்டும்; இனி அடியேன் வணங்குவதற்கு இசையும் படி நம்பிள்ளை இசைந்திருக்குமாறு சுவாமி நியமித்தருள வேண்டும்' என்று நிர்ப்பந்தித்துப் போந்தார் என்பது வரலாறு. பாகவதசேஷத்துவம் அருமையிலும் அருமை என்ப தற்கு மற்றும் ஒர் ஐதிகம் காட்டுவர் ஈட்டாசிரியர். வீரப் பிள்ளையும், பாலிகைவாளிப் பிள்ளையும் என்ற இருவர் நஞ்சீயர் பாதத்தில் ஏகாந்தராய், தங்களிலே செறிந்து போந்தார்களாய்த் தேசாந்தரம் போனவிடத்தே வெறுப் புண்டாய்த்தங்களில் வார்த்தை சொல்லாதேயிருக்க,இவர் களைப் பார்த்து, பிள்ளைகாள்!" பொருள் இன்பங்கள் தியாச்சியம் அல்லாமையோ, பகவத் விஷயம் அராட்டுப் பிராட்டாயோ42 ஒரு பூரீ வைஷ்ணவனும் பூரீ பாதங்களில் வார்த்தை சொல்லாதே வெறுத்து இருக்கிறது?" என்ன, இருவரும் எழுந்திருந்து தெண்டனிட்டுச் சேர்ந்தவர் களாய்ப் போனார்கள். 41. தியாச்சியம்-விடப்படுவது, 42. அராட்டுப்பிராட்டு-போரும் போராதது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/345&oldid=921076" இலிருந்து மீள்விக்கப்பட்டது