பக்கம்:வைணவ உரைவளம்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 325 மனிதர்கள்; குளன்.ஆர்-குளங்கள் நிறைந்த: கண்-இடமகன்ற; நன்-நல்ல; மெய்ம்மை உண்மை, ஒழிய-தவிர) மோனிடைரைப் பாடாது மாதவனை ஏத்துமாறு: கூறும் திருவாய்மொழியில் உள்ளது. இப்பாசுரம் கல்யாண குணசம்பத்துக்களையுடைய எம்பெருமானைவிட்டு அற்ப சம்பத்துகளையுடையவர்களைக் குறித்துக் கவிபாடுவாரை நிந்தித்தலை' நுவல்கின்றது. குளங்கள் நிறைந்த கழனிகள் சூழ்ந்துள்ள இடமகன்ற நல்ல குறுங்குடியில் செளலப்பியம் முதலிய குணங்களை ஒளிர்விட்டுக் கொண்டு கோயில் கொண்டுள்ள எந்தையை, எந்தைக்குப் பெரு மானை ஒழிய, தன்னை உளனாகவே கொண்டு ஒரு பொருளாக எண்ணித் தன்செல்வத்தை மிக உயர்ந்த தாக மதித்திருக்கும் இம்மானிடத்தைக் கவி பாடுவதால் பயன்யாது?’ என்கின்றார், இந்தப் பாசுரத்தின் ஈட்டுரையில் ஓர் ஐதிகம் கலப் பிரம்ம தேசத்தில் கரிகால் சோழ பிரம்மராயன் என்ற ஒரு பிரபு இருந்தான். இவன்திருவாய்மொழிக்குவியாக்கியானம் எழுதினான். இதனை கஞ்சீயரிடம் காட்டி மதிப்புரை வாங்கப் பார்த்தான். அவன் எழுதினது நன்றாக இல்லை யாயினும், மிகவும் நன்றாகவே உள்ளது என்று சொல்லியாக வேண்டும்; இல்லையென்றால் அவன் பிரபுவாதலால் ஏதேனும் தீங்கிழைக்கக்கூடும்' என்று ஐயுற்றார் நஞ்சீயர். *உத்தமாச்ரமியான நாம் இதில் அகப்பட்டுக் கொள் வானேன்?' என்றெண்ணி நம்பிள்ளையை நோக்கி நீர் இவ்வுரையை நோக்கி மதிப்புரை தருக" என்று நியமித்தார். சீயருடைய திருவுள்ளத்தையறிந்த பிள்ளையும் அங்ங்னே அவ்வுரையை வாசிக்கக் கேட்டு அவனுடைய மனம் உகக்குமாறு பாராட்டிக் கூறவேண்டுமென்று கருதி *இவ்வுரை ஆழ்வாருடைய திருவுள்ளக் கருத்துக்குப் பொருத்தமாக மிக நன்றாகவே அமைந்துள்ளது' என்று அருளிச் செய்தார். அதுகேட்டு அந்த உரைகாரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/348&oldid=921081" இலிருந்து மீள்விக்கப்பட்டது