பக்கம்:வைணவ உரைவளம்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

金堡感 வைணவ உரைவாம் (இசாயன்) ஆழ்வார் வேறொரு காரியமுமில்லாமல் பிர பந்தம் பாடினார்; நான் ஊர்க்காரியங்கள் பலவற்றையும் நோக்கிக் கொண்டே இடைஇடையில் இதை எழுதினேன்; ஆதலால் ஆழ்வார்க்கும் எனக்கும் எவ்வளவு வேறுபாடு உண்டு என்று ஆலோசித்தருள வேண்டும்' என்றானாம். தன்னையொன்றாகத் தன் செல்வத்தை ᎧᏁᎧfröyrfr மதிக்கும்' என்ற இடத்திற்கு இது மிகவும் பொருத்தமான ம்வாதமாக (உரையாடலாக) அமைகின்றது. 153 இடரின்றி யேயொரு காளொரு போழ்தில்எல் லாவுல கும்கழிய படர்புகழ் பார்த்தனும் வைதிக னும்உடன் ஏறத்திண் தேர்கடவி சுடரொளி யால்கின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை, உடலொடும் கொண்டு கொடுத்தவ ளைப்பற்றி ஒன்றுக் துயரிலேனே." இடர்-இடைஞ்சல்; கழிய-அப்பால் போகும் படியாக; பார்த்தன் - அ ரு ச் சு ன ன்; வைதிகன்-வைதிக அந்தணன்; திண்தேர்திடமான தேர்; கடவி-செலுத்தி; சோதி யில்-பரஞ்சோதி எனப்படும் திருநாட்டில்; உடலொடும் - உடம்போடும்; பற்றி -- அடைந்து.1

  • திருமால்சீர் பரவப்பெற்ற தனக்கு ஒரு குறையும் இல்லை" என்று கூறும் நம்மாழ்வார் திருமொழியில் இஃது ஒரு. பாசுரம். இதில் ஆழ்வார், ஒரு நாளில் ஒரு முகூர்த்தத். தில், துன்பம் இல்லாமல் எல்லா உலகங்கட்கும் அப்பால்.

4ல், திருவாய், 3.10.3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/349&oldid=921083" இலிருந்து மீள்விக்கப்பட்டது