பக்கம்:வைணவ உரைவளம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வைணவ உரைவளம் இருக்குமாறு இவ்வியாக்கியானத்தை அருளிச் செய்தார் 6Fuur*. இருபத்துநாலாயிரப்படி : இந்த வியாக்கியானத்தை. அருளிச் செய்தவர் பெரியவாச்சான்பிள்ளை. இதனை, நமபிள்ளை தம்முடைய நல்லருளா லேவியிடப் பின்பெரிய வாச்சான்பிள் ளையதனால்-இன்பா வருபத்தி மாறன் மறைப்பொருளைச் சொன்ன திருபத்தி நாலா யிரம்." என்று உரைப்பர் மணவாள மாமுனிகள். இராமாயணம் இருபத்து நாலாயிரம் சுலோகங்களை உடையதாதலின் அத்தொகையளவில் இவ்வியாக்கியானம் எழுந்தது. நம் பிள்ளையின் நியமனத்தால் வியாக்கியான சக்கரவர்த்தி' என்று வழங்கும் பெரியவாச்சான் பிள்ளை எழுதியதாக சுவைமிக்க வரலாறு ஒன்று உண்டு." முப்பத்தாறாயிரப்படி : இதனை எழுதி உபகரித்தவர் வடக்குத் திருவீதிப்பிள்ளை யாவர். தெள்ளிதா நம்பிள்ளை செப்பு நெறிதன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்-பிள்ளையிங்த நாடறிய மாறன் மறைப்பொருளை நன்குரைத்த தீடுமுப்பத் தாறா யிரம்." என்ற மணவாள மாமுனிகளின் திருவாக்கால் இதனை அறியலாம். பிரம்மசூத்திரத்திற்கு இராமாநுசர் செய் தருளிய ரீபாஷ்யத்தின் ஆழ்பொருள் எல்லாம் விளங்கும் பொருட்டுச் சுதரிசனபட்டர் என்பவர் சுருதப்பிரகாசிகை என்னும் நூல் ஒன்றினைச் செய்தார்; அது முப்பத்தாறா யிரம் கிரந்தங்களையுடையது; அத்தொகையளவில், இவ்வியாக்கியானமும் எழுந்தது.

  • 2. U . ut nr 4 3 ஈட்டின் தமிழக் கம்-பகுதி 1-பக் (39-40): 2-. Йт. шот. - 44
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/35&oldid=921085" இலிருந்து மீள்விக்கப்பட்டது