பக்கம்:வைணவ உரைவளம்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 327 படர்ந்த புகழையுடைய அருச்சுனனும் வைதிக அந்தண னும் தன்னுடன் ஏறி வரும்படியாகத் திண்ணிய தேரைச் செலுத்தி, ஒளிப் பிழம்பாயுள்ள தனது பரமபதத்தில் தங்கி யிருந்த அந்தணனுடைய பிள்ளைகளைச் சரீரத்தோடும் கொண்டு வந்து கொடுத்த இறைவனை அடைக்கலமாக அடைந்து சிறிதும் துயர் உடையேன் அல்லேன்' என்கின் றார்.இப் பாசுரத்திலுள்ள இதிகாசம்: இந்நூல் பாசுரம்-1இல் காண்க. 'உடலொடுங் கொண்டு கொடுத்தவனை என்ற இடத்தை விளக்கும்பொழுது பட்டர், காலத்தால் உண்டாகின்ற மாறுபாடுகள் ஒன்றும் இல்லாத தேசமாகை யாலே, கொண்டு போகின்ற போதைப்படியில் ஒன்றுங் குறையாதபடி கொண்டு வற்து கொடுத்தவன். அன்றிக்கே பூசின மஞ்சளும், உடுத்தின பட்டும், இட்ட சுவடிப் பூணு நூலும், இட்ட காதுப் பணிகளுமான ஒப்பனையில் ஒன்றும் குறையாதபடி கொண்டு வந்து கொடுத்தவன்' என்றா ராம். அது கேட்டவர்கள், இப் பிள்ளைகள் பிறந்த கணத்திலேயே கொண்டுபோகப்பட்டவர்களாக வன்றோ சொல்லுகின்றது' என்று பட்டரைக் கேட்க: அவரும், *இருடி புத்திரர்களாகையாலே, பிறக்கிறபோதே அவற றோடு பிறப்பர் காணும்' என்று அருளிச் செய்தாராம. ரஸோக்தியை அநுபவித்து மகிழ வேண்டும். நான்காம் பத்து T 54 'கண்ணாதார் முறுவலிப்ப' : இந்தத் திருவாய்மொழி யின் அவதாரிகையில் கண்டது: பேறு பெறுவதற்கு எப்படி அவன் கை பார்த்திருக்க வேண்டுமோ, அப்படியே முடி கைக்கும் அவன் கை பார்த்திருக்க வேண்டுமாகையாலே 1. இகுவாய். 4.9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/350&oldid=921087" இலிருந்து மீள்விக்கப்பட்டது