பக்கம்:வைணவ உரைவளம்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 வைணவ உர்ைவளம் எம்பெருமானே! என்னை நீதானே முடித்திடாய்” என்கின் றார். ஆழ்வாருடைய ஆர்த்தி பேச்சுக்கு நிலமல்லாபடி பெருகின்மை இத் திருவாய்மொழியில் விளங்கா நின்றது. ஆழ்வாருடைய ஆர்த்திக்கு மூன்று காரணங்கள் உண்டு. எம்பெருமானோடு கலவி பெறாமல் பிரிந்து படும் ஆர்த்தி ஒன்று; சம்சாரிகளோடு சகவாசம் பொறுக்க வொண்ணாததால் அத்தால் வரும் ஆர்த்தி ஒன்று இந்திரி யங்கள் விஷயங்களிலே கொண்டுபோய் மூட்டி அநர்த்த ங் களை விளைவிக்கையாலே அத்தாலே வரும் ஆர்த்தி ஒன்று. இவற்றுள் எம்பெருமானுடைய பிரிவினால் வந்த ஆர்த்தி ஏறாளும் இறையோனும்' (4.8) என்ற திருவாய் மொழியில் கண்டது. இந்திரியங்களால் வரும் ஆர்த்தி க:உண்ணிலாவிய ஐவரால்" (7.1) என்கின்ற திருவாய் மொழியில் காணலாகும். சம்சாரிகளிடையே சகவாசம் பொறுக்க வொண்ணாமையிலாகும் ஆர்த்தி இத் திருவாய் மொழியில் காணலாகும். இத் திருவாய்மொழியின் அவதாரிகையை எம்பார் ஒருவகையாகவும் ஆழ்வான் ஒருவகையாகவும் யோசிப் பார்களாம். எம்பார் யோசனை : *உன்னை யொழியப் புறம்பே பேறும் இழவுமா யிருக்கிற சம்சாரிகள் நடுவே இருக்கின்ற இருப்பால் படுகின்ற கிலேசமானது உன்னைப் பிரிந்திருந்து படுகின்ற கிலேசத்தளவல்ல; உன் பிரிவை ஒருவாறு ஆற்றலாம்; இந்த மகா பாபிகளான சம்சாரி களின் இடையே இருப்பதாகின்ற கிலேசம் ஒரு விதத்தாலும் ஆற்றப் போவதில்லை; ஆதலால் இவ் விருப்பைத் தவிர்த் தருள வேண்டும்' என்று பிரார்த்திப்பதாக உள்ளது. ஆழ்வானுடைய யோசனை : தம்முடைய ஆற்றாமைக்கு சம்சாரிகளில் யாரேனும் கூட்டாவார் உளரோ என்று உலகத்தாருடைய செயல்களை ஆய்ந்து சம்சாரிகளை நோக்கினார்; அவர்கள்தாம் சர்வேசுவரனிடத்தில் ஈடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/351&oldid=921089" இலிருந்து மீள்விக்கப்பட்டது