பக்கம்:வைணவ உரைவளம்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.32 வைணவ உரைவளம் ரால் அழைக்கப்பட்டு மதுரைக்கு எழுந்தருளினபோது அவ்வூரிலுள்ள இராஜ வீதியில் கம்சனுடைய வண்ணான் துணி மூட்டைகளைச் சுமந்து கொண்டு வர, இவ்விருவரும் அவனிடத்தில் ஆடை விரும்ப, அவன் கொடாதொழிந்தது. 下 S@ உய்வு பாயமற் றின்மைதேறிக் கண்ணன் ஒண்க ழல்கள்மேல் செய்ய தாமரைப் பழனத் தென்னன் குரூஊர்ச் சடகோபன் பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணுடே." |உய்வு உபாயம்-தரிக்க விரகு; மற்று-வேறு வழியினால்; தேறி-துணிந்து,தண் கழல்கள்அழகிய திருவடிகள்; பழனம்-நீர் நிலம்; வையம்-பூமண்டலம்; மன்னி-நெடுங்காலம் பொருந்தி; மண்ணுடே-இந்நிலத்திலேயே: விண்ணும் - பரமபதத்தையும்; ஆள்வர்பெறுவர்.1 எம்பெருமானது சேர்க்கையால் எய்திய இன்பத்தைக் கூறும் திருவாய்மாைழியில் ஒரு பாசுரம் இது. ஆழ்வார் இதரல், செந்தாமரைமலர்கள் நிறைந்துள்ள வயல்களால் சூழப்பட்ட தெற்குத் திசையிலேயுள்ள சிறந்த திருக்குரு கூரிலே அவதரித்த சடகோபர், நன்னெறி சேர்தற்குரிய வழி வேறு இல்லாமை தெளிந்து கண்ணபிரானுடைய சிறந்த திருவடிகளின்மேலே சாத்திய பொய் இல்லாத பாசுரங்கள் ஆயிரத்துள் இவை பத்துப் பாசுரங்களையும் கற்று வல்லவர்கள் பூவுலகில் பலகாலம் தங்கியிருந்து இவ் 4. திருவாய், 4.3:11.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/355&oldid=921097" இலிருந்து மீள்விக்கப்பட்டது