பக்கம்:வைணவ உரைவளம்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 333. வுலகத்தில் இருந்து கொண்டே பரமபதத்தையும் ஆட்சி புரிவர்" என்கின்றார். வையம் மன்னி வீற்றிருந்து : என்ற இடத்தில் சநம்மைப் போலே வாய்புகு சோறாகப் பறி கொடாதே பலகாலம் பூமியிலே பூரீவைஷ்ணவ ரீயோடே நாட்டா ரோடு இயல் ஒழிந்து' என்கின்றபடியே, தங்கள் வேறுபாடு தோன்ற இருக்கப் பெறுவர்கள்' என்று (நஞ் சீயர் உருத் தோறும் அருளிச் செய்வர். பால்யத்தில் பட்டரைப் பறி கொடுத்தவர் அன்றோ இவர்? கஞ்சீயர் பட்டர் திருவடி சம்பந்தம் பெற்றபின்பு, நெடுங்காலம் பட்டரிடம் அர்த்த விசேடங்கள் கேட்டு இன்புற வேண்டுமென்று இருந்தார்; இருக்கையில் பட்டர் திருநாட்டுக்கெழுந்தருள நேர்ந்துவிட்டது. இதுவே இவர் தம் வருத்தத்திற்குக் காரணம். இன்னொரு குறிப்பு : பட்டர் இருபத்தெட்டு (அல்லது முப்பத்து இரண்டு) அகவையில் திருநாட்டுக்கெழுந்தருளி னார் என்று சிலர் கூறுவதுண்டு. இதற்குப் போதுமான சான்று கிடைத்திலது; ஆராய்ந்து பார்க்குமளவில் பட்டரி ஐம்பது அல்லது ஐம்பத்தைந்து வயது வரை எழுந்தருளி யிருந்தார் என்று கூறுவதற்குச் சான்றுகள் உள்ளன. நூற்றிருபது திருநட்சத்திரம் (வயது) எழுந்தருளியிருந்த எம்பெருமானாரை நோக்குமிடத்து பட்டர் எழுந்தருளி யிருந்தது மிகவும் சிறிது காலமே என்று சொல்லலாம்படி உள்ளது என்பர் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காரச்சாரியம் சுவாமிகள். 警5ア திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்: உருவுடை வண்ணங்கள் காணில் 'உலகளந் தான்' என்று துள்ளும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/356&oldid=921099" இலிருந்து மீள்விக்கப்பட்டது