பக்கம்:வைணவ உரைவளம்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 வைணவ உரைவளம் (பகவர்-பகவானுக்கு அடிமைப்பட்டவர்; சந்தியா சிகள்; விரும்பி- ஆதரவு கொண்டு பேணி: வியல் இடம்-அகன்ற உலகம்; ஏறப்பறக்கும். மேலே எழுந்து பறப்பதற்கு அமரா நிற்பாள்: பெருபுலம் - பெரியனவாவும் காட்சிக்கு இனியனவாயும் உள்ள ஆநிரை-பசுக்கூட்டம் பிரான்-உபகாரகன்; பெறல் அரு-பெறுவதற். அரியளான; அலற்றி-வாய்விட்டு அலரும்படி பண்ணி; அயர்ப்பிக்கின்றாள்-மயங்கச் செய் கின்றாள்) இதுவும் தாய்ப் பாசுரமே. இதில், பகவானுக்கு அடிமைப் பட்ட துறவிகளைக் கண்டால் விரும்பி, அகன்ற உலகத்தை யெல்லாம் புசித்த திருமால் என்பாள்; கரிய பெரிய மேகங்களைக் கண்டால் கண்ணபிரான் என்று கூறிக் கொண்டு மேலே எழுந்து பறப்பதற்குப் பாராநின்றாள்: பெரியவனவாயும் காட்சிக்கு இனியனவாயும் இருக்கிற பசுக்கூட்டங்களைக் கண்டால் கண்ணபிரான் அவற்றினி டையே இருக்கின்றான் என்று அவற்றின்பின்னே செல்லு வாள்; பெறுதற்கரிய என் பெண்ணினை மாயவன் வாய் விட்டு அலறும்படி செய்து மயங்கச் செய்கின்றான்' என்று. தன் மகள் நிலையைத் திருத்தாயார் கூறுகின்றார். ,கரும்பெரும் மேகங்கள் காணில், இங்கே ஒர் இதிகாசம் ஈட்டில் அருளிச் செய்யப்பெறுகின்றது. இராஜேந்திர சோழன் என்ற ஊரில் திருவாய்க்குலத்தாழ்வார் என்ற பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். அவர் கார்காலத்தில் ஒரு நாள் பயிர் பார்க்கவென்று புறப்பட்டு வயலருகில் சென்ற பொழுது மேகத்தைக் கண்டவுடன் மோகித்து விழுந்தார்: இவர் விழுந்ததைக் கண்டு நின்ற குடிமகன் ஓடிவந்து அவரை எடுத்தக்கொண்டு வந்து இல்லத்திலேவிட்டு, இவர் தன்மையை அறிந்திருந்தும் இந்நாளிலே இவரை வயல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/359&oldid=921106" இலிருந்து மீள்விக்கப்பட்டது