பக்கம்:வைணவ உரைவளம்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33% ைைவ உரைவிளம் யெர்த்தும் 'கண்ண! என்று பேசும், 'பெருமானே! வா என்று கூவும்: மயற்பெருங் காதல்என் பேதைக்கு என்செய்கேன் வல்வினை யேனே."2 |அயர்க்கும்-மயங்குவாள்; சுற்றும் - சுற்றிலும்; அகல-பார்த்த கண்ணைஒட்டி: நீள்நோக்கு -நெடும் பார்வை; வியர்க்கும் - வியர்த்து நிற்பாள்; வெம் - வெவ்விதாக; உயிர்க் கொள்ளும்-நெடுமூச்செறிகின்றாள்; மெய்உடல்;. சோரும்-வாடுவாள்; பெயர்த்தும்-பின்னையும்; பேசும்-கூப்பிடுவாள்; மயல் -பிச்சேறும்படி, பேதைக்கு - சொற்கேளா பெண்ணுக்கு: வல்வினையேன் - கொடிய பாவியாகிய யான்) இதுவும் தாய்ப் பாசுரம். அதில் 'என் மகள் மயங்கு வாள், பின்னர் நாற்புறத்திலும் பலகாலும் பாரா; நிற்பாள் விரிந்து செல்லும்படி நீண்ட தூரம் பார்ப்பாள்: பின்னர் வியர்த்து நீராக நிற்பாள்: குளிர்ந்த கண்களில் நீர் துளும்பும் படி பெருமூச்சு எறிவாள்; தளர்வாள்: மீண்டும் கண்ண பிரானே!" என்று பேசுவாள்; பெருமானே வா' என்று கூவுவாள்; பெரிய காதலால் மயக்கம் கொண்ட என் பெண்ணிற்கு வல்வினையேன் என் செய்வேன்?' என்று திருத்தாயார் பேசுகின்றாள். வல்வினையேன்” என்ற இடத்து ஈட்டில் ஒர் ஐதிகம் : :இவளை இப்படிக் காணும்படி மகாபாபத்தைப் பண்ணி னேன். ஆழ்வான் திருநயனங்கள் நோவுபட்ய பின்பு எம் பெருமானார் திருவுள்ளம் நோவுபட்டாப்போலே காணும் திருத்தாயார் திருவுள்ளமும் படுகின்றது. என்பதாக. 12. திருவான். 4. 4:10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/361&oldid=921111" இலிருந்து மீள்விக்கப்பட்டது