பக்கம்:வைணவ உரைவளம்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多40 வைணவ உரைவளம் 'கமக்கும் பூவின்மிசை கங்கைக்கும் இன்பனை : எம். பெருமான் பிரீதிபண்ணுமிடத்தில் அகலகில்லேன் இறை யும் என்று கூறும் பிராட்டியிற் காட்டிலும் அதிகமாகவே நம்மிடத்தில் பண்ணுவன் என்பது ஈண்டு அறியத் தக்கது. இங்கே ஈட்டு ரீசூக்தி காண்மின் : இன்பனாமிடத்தில் முற்பாடு இங்கேயாய்ப் பின்பாயிற்று அவளுக்குச் சிநேகித் திருப்பது." வரலாறு : இலங்கையிலேயுள்ள சுவேல மலையில் பெருமாள் எழுந்தருளியிருக்கும்போது இராவணன் கோபுர சிகரத்தே வந்து தோன்றினான். 'இராஜத் துரோகியான பயல் திருமுன்பே நிற்பதும் நீதியோ?" என்று மகாராஜர்: அவன்மேலே எழப் பாய்ந்து வென்று வந்த போது பெருமாள் அவரைப் பார்த்து, 'இராஜாக்கள் இப்படிப் பட்ட சாகசக் காரியங்களைத் தாங்களே செய்ய மாட்டார்கள்' (gராமா. யுத். 41:2) என்றது, சிலர் மேல் விழ வேண்டினால், சேனைத் தலைவர்கள் நிற்க அரசரோ மேல் விழுவார் என்கின்றார் என்றபடி, உனக்கு ஒர் அனர்த்தம் விளையுமாகில், பின்னை சீதாப்பிராட்டிதான் எனக்குக் கிடைத்தென்ன?’ என்றார். இதனால், பிராட்டி பக்கலிற் காட்டிலும் அடியவர் திறத்தில் எம்பெருமானுக் குள்ள அன்பின் கனம் அறிய எளிதாகின்றது. மேலும், பூரீராமபிரான் உலகங்களுக்கெல்லாம் நாதனாக இருந்தும் சுக்கிரீவனை நாதனாக இச்சிக்கின் றார்" (பூரீராமா. கிஷ், 4:18) என்னா நின்றதேயன்றோ? கிடைப்பது கிடையாதொழிவது இச்சியா நின்றார். *அத்தகைய இந்த பூரீராமபிரான் சுக்கிரீவனைச் சரண மாக அடைந்தார்" (பூரீராமா. கிஷ். 4:20) என்னா நின்ற தேயன்றோ? நீர் மகாராஜரான தரம் குலைய அவன் ஒரு 14. மகாராஜர்-இவ்வாறு சுக்கிரீவனைக் குறிப்பது *a16ծr6ն ւDքrեյ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/363&oldid=921116" இலிருந்து மீள்விக்கப்பட்டது