பக்கம்:வைணவ உரைவளம்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி $4$ வார்த்தை சொல்லுமாகில் நீர் தேடிப் போகின்ற சரக்குத் தான் நமக்கு என்ன செய்ய?’ (பூரீராமா. யுத்த. 41:4) என்றாரேயன்றோ? இதற்குக் காட்டும் ஐதிகம் பூரீ விபீஷணாழ்வானைப் புகுரவொட்டேன்' என்கிறார் மகாராஜர்; ' இவன் புகுரா விடில் நாம் உளோமாகோம் என்கின்றார் பெருமாள். இப்படி இருவரும் மாறுபடுவதற்குக் கருத்து என்?" என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க, அவர் இருவரும் சரளமாகப் பற்றினவர்களை விடோம் என்று மாறுபடுகிறார்கள் காணும் என்று அருளிச்செய்தார். சுக்கிரீவம் சரணம் கத' என்றதனை நடத்தப் பார்த்தார் மகாராஜர்; *இராகவம் சரணம் கத:' என்றதை நடத்தப் பார்த்தார் பெருமாள் என்றபடி, அங்ங்ணமாயின், மகாராஜர்க்குத் தம்மை அடிமையாக நினைத்திருக்கும் நிலைகுலையாதோ? எனின்: ஆகையாலேயன்றோ வானரங்களுக்குத் தலை வனே! இவனை அழைத்துக்கொண்டு வா" என்று அவரை இடுவித்து அழைத்துக்கொள்ள வேண்டிற்று. T 61 தீர்ப்பாரையாம் இனி' : (அவதாரிகை). இது தோழி பாசுரம். ஆழ்வார் தாமான தன்மையை இழந்து ஒருதலைமகளாம் நிலைமையை எய்தி, அது தன்னிலும் தம் வாயாலே சொல்லமாட்டாமல் வேற்று வாயாலே சொல்ல வேண்டித் தோழியின் பேச்சாகச் சொல்லுகின்றது இத் திருவாய்மொழி. வெறிவிலக்குத் துறையிலே அவதரித்தது இது. தோழியின் பேச்சாகச் சொல்லுவதற்கு ஒரு தத்துவம் உண்டு. திருமந்திரம் ஓம் நமோ நாராயண' என்பது. ஓம்’ என்ற பிரணவம் ஆன்மாவின் அடிமைத் தன்மையையும் 15. தேடிப்போகிற சரக்கு" என்றது சீதாப் பிராட்டியை. 16. திருவாய் 4.6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/364&oldid=921119" இலிருந்து மீள்விக்கப்பட்டது