பக்கம்:வைணவ உரைவளம்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$46 வைணவ உரைவளம் மணியின் அணிகிற மாயன் தமரபு. கீறுகொண்டு அணிய முயலின்மற் றில்லைகண் டிர்இவ் அணக்குக்கே2. 1.தணியும் பொழுது-சிறிதும் ஓய்வு; நீர்-நீங்கள்: அணங்கு-வெறியாட்டு; பிணியும்-நோயும்; ஒழிகின்றது-திர்கின்றது; இது அல்லால்-இது மாத்திரமேயன்றி; மணியின்- நீலமணியிற் காட்டில்; அணிநிறம்-அழகிய நிறம்; மாயன் தமர்- பாகவதர்கள; அடிநீறு- பாதது.ாளி: அணிய-இடுவதற்கு; மற்று-பிறிது என்னும் பொருளில் வந்தது) இத்திருவாய் மொழிப் பாசுரமும் வெறிவிலக்குப் பாசுரமே. அந்தோ! சிறு பிள்ளைகள் போல் நீங்கள் செய்கின்றீர்களே! ஏதாவது ஒரு காரியத்தைச் சிறு பிள்ளைகள் செய்யும்போது அதன் தகுதியின்மைகண்டு பெரியோர்கள் மறுத்தால், அப்பிள்ளைகள் அக்காரியத் தையே மேன்மேலும் பிடிவாதமாய் வலிந்து செய்வது வழக்கமாதல் போலவே, நீங்களும் நான் மறுப்பதை ஏதுவாகப் பிடிவாதம் கொண்டு வெறியாட்டை விடாது செய்கின்றீர்களே! இதனால் பிணி ஒழியாததோடு பெருகி நிற்பதையும் சுாண்கின்றோ.ே ம' எ ன் கி ன் ற | ள் முன்னிரண்டு அடிகளில். பின்னிரண்டு அடிகளில் : நீலமணி வண்ணனான எம் பெருமானுடைய வடிவழகில் ஈடுபாடு கொண்ட பாகவதர் உளின் பாத துரளியைக் கொண்டுவந்து....' என்று இவள் தொடங்கும் போதே தாய்மார்கள் : ... இவ் வரும் பொருள் நமக்குக் கிடக்க வழி ஏது? மிகவும் அரிதானபொருளைச் சொல்லுகின்றாயே, இதனைச் சம்பாதிப்பது சிரம 21. திருவாய். 4. 6: 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/369&oldid=921127" இலிருந்து மீள்விக்கப்பட்டது