பக்கம்:வைணவ உரைவளம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வைணவ உரைவளம் அந்த நான்கு பத்திற்குமட்டிலும் மணவாள மாமுனிகள் வியாக்கியானம் செய்துள்ளார். கஞ்சீயர் அழகிய மணவாளச் சீயர், அழகிய மணவாளப் பெருமாள் நயினார் என்னும் பெரி யார்களும் திருப்பாவை, அமலனாதிபிரான், கண்ணி நுண் சிறுத்தாம்பு ஆகியவற்றிற்கு வியாக்கியானம் இட்டுள் ளனர். மணவாள மாமுனிகள் திருவடி சம்பந்தம் பெற்ற அப்பிள்ளை என்பார் இயற்பாவுக்கு அருளிச் செய்த வியாக்கி யானமும் உண்டு. மணவாள மாமுனிகளும் பிள்ளை லோகார்ய சீயரும் இராமாதுச நூற்றந்தாதிக்கு வியாக் கியானம் செய்துள்ளனர். இவை தவிர முப்பத்தாறா யிரப்படிக்கு ஜீயர் அரும்பதம், அடையவளைந்தான் அரும் பதம் என்னும் இரண்டு குறிப்புரைகளும் உள்ளன. பதினெண்ணாயிரப்படி : பெரிய பரகால சுவாமி என் பவர் ஆறாயிரப்படி என்னும் உரைக்கு ஒர் உரை வரைந் துள்ளார். இது பதினெண்ணாயிரப்படி என வழங்கு கின்றது. இதில் ஒவ்வொரு சொல்லுக்குப் பொருளும், ஒரு பாசுரத்தின் விளக்கமும் அமைந்துள்ளன. உரைகளின் நயம் : நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வாரால் அருளிச் செய்யப் பெற்றது போன்று வியாக்கியானங்களும் இறைவ னுடைய திருவருளுக்கு முற்றும் இலக்காய் ஆழ்வார்களின் பேரருளுக்கும் பாத்திர யூதர்களாய் வடமொழி தென் மொழி ஆகிய இரு மொழிகளிலும் பேரறிவு படைத்தவர் களாய் இருந்த பெருமக்களால் அருளிச் செய்யப்பட்டவை யாதலின், திவ்வியப் பிரபந்தம் போன்றே.வியாக்கியானங் களும் அருமை பெருமைகளையுடையன. இவ்வியாக்கி வானங்கள் மணிப்பிரவாள நடையில் அமைந்தவை; சுவாதுபவத்தோடு செய்யப்பெற்றவையாத லின் களிப் போர்க்கும் சுவாதுபவத்தை விளைவிக்கக் கூடியவை. இந்த உரைகளுள் ஈட்டின் நடையழகு தனிச் சிறப்பு வாய்ந்தது; பொருளுணர்வோடு பயிலப் பயிலப் பேரின்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/37&oldid=921129" இலிருந்து மீள்விக்கப்பட்டது