பக்கம்:வைணவ உரைவளம்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி ፩4ዝዮ மாயிற்றே" என்று சொல்ல, அன்னை மீர்! மாயன்தமரடி நீறுதன்னைக் கொண்டுவர வேண்டும். இவளுக்கு அதை இடவேண்டும்? என்று மனத்தால் எண்ணினாலும் போதும்: அவ்வளவிலேயே நோய் தீர்ந்ததாகும், பாருங்கள்" என்கின்றாள். 'மனத்தால் எண்ணினால் மட்டிலும் போதுமா?’ என்ற ஐயத்திற்குப் பரிகாரமாக ஈட்டில் 'ஆது கூல்யஸ்ய சங்கல்ப பிராதிகூலஸ்யவர்ஜனம்’22 என்ற பிரபத்தியின் அங்கங் களைக் காட்டும் பாஞ்சராத்ரப் பிரமாண சுலோகத்தை எடுத்துக் காட்டித் தெளிவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆது கூல்யத்தைப்பற்றின எண்ணம் போது மென்றும், பிராதி கூல்யத்திலோ வென்னில், அதை விடுவோம் என்கின்ற எண்ணம் போதாது, விட்டே தீரவேண்டும் என்றும் விளக்கப் பெற்றுள்ளது. இதுபோலவே இங்கு மாயன் தமரடி, நீறு கொண்டு இடவேண்டுமென்ற முயற்சியளவே போதும் என்றும், பரிகாரதாகச் செய்துவருகின்ற கீழான காரியங்களை விடுவோம் என்று எண்ணினால் மட்டிலும் அமையாது, கடுகவிட்டே தீரவேண்டும் என்றும் தெரி வித்தவாறு அறியத் தக்கது. இங்கே வைணவ பாதது.ாளியின் சிறப்பினைப்பற்றின ஓர் ஐதிகம் : அகளங்க நாட்டாழ்வான்: வண்டலங்கார 22. வர்ஜனம்-அடியோடு நீக்குதல் 23. இவன் சோழப் பேரரசில் உறையூரைத் தலை நகராகக் கொண்டு ஒரு பகுதியை ஆண்டு வந்த ஒரு சிற்றரசன். இவனுக்கு இராமானுசர் பஞ்ச சம்ஸ்காரங்க ளைச் செய்வித்து சீடனாக ஆட்கொண்டார். அகளங்கன் அகளங்க நாட்டாழ்வான்' என்றதாஸ்ய நாமம் பெற்றான். இங்னைக் கோயிற்பணியாளர்களுக்கெல்லாம் மேலதிகாரி யாக்கினார். இந்தச் சீடனின் தலைமையில் திருவரங்கம் ஒருகோயில் நகரமாகவும், திருவிழா நகரமாகவும் வளர லாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/370&oldid=921131" இலிருந்து மீள்விக்கப்பட்டது