பக்கம்:வைணவ உரைவளம்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$50 фаната в авиантф அவனைக் கொண்டு ஆவேசமிடுவிப்பதும் சிறு தெய்வங் களுக்கு உரிய பலிகளை இடுவிப்பதும் செய்ய, அதற்குத் தலைமகள் மிகவும் வருந்தா நிற்க, அச்சமயத்தில் அவளது துன்பத்தின் உண்மையான காரண முணர்ந்த தோழி அந்த முயற்சிகளைக் கண்டித்துக் கூறுகின்ற பாசுரமாகச் செல்லு கின்றது. இது. இதில் தோழி பேசுவது : சர்வேசுவரனை அல்லாமல் வேறு ஒரு தெய்வத்தை நினைத்து வணங்கமாட்டாள் இவள்; இங்ங்ணமிருக்க, உங்களுக்கு விருப்பமானவற்றை யெல்லாம் சொல்லி உங்களுடைய தோள்களை வருந்திக் கொள்ளுகின்ற தாய்மார்களே! என்றும் நிலைத்திருக்கின்ற வேதங்களால் சொல்லப்பெறுகின்றவனும், வளப்பம் பொருந்திய துவாரகைக்கு நாதனுமான சர்வேசுவரனைத் துதியுங்கள்; துதி செய்த அளவிலே அவனைத் துதி செய்து ஆடுவாள்' என்கின்றாள். ஐதிகம் : துவாரபதி என்பது கண்ணன் ஆண்ட தலை நகரம, தஞ்சைமா வட்டத்திலுள்ள இராஜமன்னார் கோயில்' என்ற ஊரிலுன்ள இராஜமன்னார் சந்நிதியில் இப் பாசுரம் மிக்க சிறப்புப்பெற்று வரும். ■35 அப்ப னே! அட லாழி யானே! ஆழ்கட லைக்கடைந்த துப்ப னே!உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொலென்று எப்பொழு தும்கண்ண நீர்கொண் டாவி துவர்ந்து துவர்ந்து இப்பொழுதேவந் திடாயென் றேழையேன் நோக்குவனே.2' 27. திருவாய் 4.7:5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/373&oldid=921137" இலிருந்து மீள்விக்கப்பட்டது