பக்கம்:வைணவ உரைவளம்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352. வைணவ உரைவிளம் T66 மணிமாமை குறை வில்லா மலர்மாதர் உறைமார்பன் அணிமானத் தடவரைத்தோள் அடலாழித் தடக்கையன் பணிமானம் பிழையாமை அடியேனைப் பணிகொண்ட மணிமாயன் கவராத மடகெஞ்சால் குறைவிலமே." [மணிமாமை-அழகிய நிறம்: குறைவு இல்லாநிரம்பி யிருக்கப் பெற்ற; மலர்மாதர்-பெரிய, பிராட்டியார்; அணி மானம்-அழகியதாய்ப். பெருத்து: அடல் - கொல்லுதல்; ஆழி -- சக்கரம்; மானம்-அளவு: பிழையாமேதப்பாதபடி, பணி கொண்ட - அடிமை கொண்ட, மணி-நீல மணி: கவராதவிரும்பாத.1 இது மகள் பாசுரம் : எம்பெருமான் விரும்பாதவை களால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாக அமைந்த பாசுரம் இது. இதில், மணி போன்ற ஒளியை புடைய அழகிலே யாதொரு குறையும் இல்லாத பெரிய பிராட்டியார் நித்திய வாசம் செய்கின்ற மார்பையுடைய வனும், அழகிய பெருமை பொருந்திய விசாலமான மலை போன்ற தோள்களையும் பகைவர்களைக் கொல்லுகின்ற சக்கரத்தைத் தரித்த திருக்கரத்தையும் உடையவனும், கைங்கரியத்தின் அளவிலே தவறாமல் அடியேனை அடிமை கொண்ட நீலமணி போன்ற நிறத்தையுடைய மாயவனு: மான சர்வேசுவரனால் விரும்பப்படாத மடநெஞ்சால் ஒரு காரியத்தை யுடையோம் அல்லோம் என்கின்றாள் ஆழ்வார் நாயகி. 28. திருவாய் 4.8:2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/375&oldid=921140" இலிருந்து மீள்விக்கப்பட்டது