பக்கம்:வைணவ உரைவளம்.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 353 பணி மானம் பிழையாமே : கைங்கரிய விருத்திகள் தப்பாதபடி. இங்கு ஈட்டில் ஓர் ஐதிகம். எம்பெருமா னார் திருமடத்தில் பூரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யா நிற்க, அவர்களுக்குத் தீர்த்தம் பரிமாறுகின்ற கிடாம்பி ஆச்சான் நேரே நின்று பரிமாறாமல், ஒரு பக்கமாய் சாய்ந் திருந்து பரிமாறினாராம்; அத்தை உடையவர் கண்டு ஒடி வந்து முதுகில் அடித்து, உடோ, இப்படியா பரிமாறுவது? நேரே நின்றன்றோ பரிமாற வேணும்' என்று சிட்சிக்க அப்போது ஆச்சான் பணி மானம் பிழையாமே அடியே னைப் பணி கொண்டருளிற்றே!' என்று உகந்தாராம். இன்னும் ஓர் ஐதிகம் : கவராத மடநெஞ்சால் குறை விலமே என்ற இடத்தில் நஞ்சீயர் அருளிச் செய்வதொரு வார்த்தை உண்டு. கோவை வாயாள் (திருவாய் 4.3) என்ற திருவாய்மொழியில் பூசுஞ்சாந்து என் நெஞ்சமே” (4.3:1) என்னும்படி, அன்று அப்படி விரும்பினவன் இன்று இப்படியே உபேட்சிக்கையாலே, நாயகன் வரவு தாழ்த் தான்' என்று அவன் முன்னிலையில் சாந்தைப் பரணி யொடு உடைப்பாரைப்போலே, என் நெஞ்சு எனக்கு வேண்டா என்கின்றாள்' என்பது. இதில் நெஞ்சின் з тifl шишоптєву நினைவினைக் சாந்தாகச் சொன்னதை நோக்கி இவ்வாறு பேசுகின்றான். நெஞ்சைச் சாந்துப் பரணியாகக் கொண்டு (பரணி.சிமிழ்), சாந்தைப் பரணியொடு உடைப்பாரைப்போலே" என்று எடுத்துக் காட்டு அருளிச் செய்கின்றார். நெஞ்சு பரணி யாகவும், அதிலுண்டான நினைவு சாந்தாகவும் கொள்ள வேண்டும். இதன் ரஸோக்தி அநுபவித்து மகிழத்தக்கது. 29. இத் திருவாய்மொழி எம்பெருமானது சேர்க்கை யால் பெற்ற இன்பத்தைக் கூறுவது. ஆழ்வார் தானான தன்மையில் பேசுவது. வை.-23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/376&oldid=921142" இலிருந்து மீள்விக்கப்பட்டது