பக்கம்:வைணவ உரைவளம்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 வைணவ உரைவனம் 16ア காட்டிரீ கரந்துமிழும் நிலமர்தீ விசுமபுகால் ஈட்டிரீ வைத்தமைத்த இமையோர்வாழ் தனிமுட்டைக் கோட்டையினிற் கழித்தெனை உன் கொழுஞ்சோதி உயரத்துக் கூட்டயரிய திருவடிக்கண் எஞ்ஞான்று கூட்டுதியே." | காட்டி-(உண்டாக்கிக்) காட்டி, கரந்துமறைத்து: உமிழும் - வெளிப்படுத்தும்; விசும்பு-ஆகாயம்; கால்-காற்று, ஈட்டிஒன்றாகத் திரட்டி வைத்து; இமையோர் வாழ் தனி முட்டை-பிரம்மாண்டம்: கழித்து -அப்புறப் படுத்தி; கொழுசோதி-மிக்க ஒளி: எஞ்ஞான்று - என்றைக்கு; கூட்டுவாய்கூட்டிக் கொள்வாய்)

  • உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார், திருவடி சேர்க்குமாறு எம்பெருமானை வேண்டுகின்ற திருவாய் மொழியில் இஃது ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், எம் பெருமானை நோக்கி, நீ உலகத்தை உண்டாக்கிக் காட்டிப் பிரளயம் வந்தவாறே உண்டு மறைத்துப் பிரளயம் நீங்கினவாறே வெளிநாடு காண உமிழ்ந்த, நிலமும், நீரும், தீயும், ஆகாயமும், காற்றும் ஆகிய ஐந்து பூதங்களையும் சேர்த்துச் சமைத்து வைத்த தேவர்கள் வாழ்கின்ற ஒப்பற்ற அண்டமாகின்ற கோட்டையினின்றும் நீக்கி என்னை உன்னுடைய மிக்க ஒளியோடு கூடிய பரமபதத்திலே பெறுதற்கு அரிதான திருவடிகளிலே எப்பொழுது கூட்டு வாய்?" என்கின்றார்.

30. திருவாய். 4.9;8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/377&oldid=921144" இலிருந்து மீள்விக்கப்பட்டது