பக்கம்:வைணவ உரைவளம்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 357 சொல்லுமது. அவற்றைத் தம் வாயால் சொல்லமாட்டா மையால் அவம்' என்கின்றார். தங்கள் கூட்டத்தில் இரகசியமாகச் சொல்லுமது ஒழிய எல்லாரும் அறியச் சொல்லுதல் இல்லையாதலின் பறைதல்' என்கின்றார். இதற்குப் பிரமாணம் காட்டுகின்றார் ஈட்டாசிரியர்: மகாபலி பிரகலாதாழ்வான் பக்கலிலே வந்து இராஜ்ய மடைய ஒளிமழுங்கி வாரா நின்றது; என் பலமும் குறைந்து வாரா நின்றது; இதற்கு அடி என்?' என்ன, நீ சர்வேசு வரன் பக்கல் பண்ணின அபராதத்தாலே காண்’ என்ன, *இந்த விஷ்ணு எவன்' என்பது போன்ற விருப்பு இல்லாத வார்த்தைகள் சிலவற்றைப் பேச, எனது தலையை அறுப்பதைக் காட்டிலும் பெரிது இந்த வார்த்தை' என்கிற படியே, என் தலையை அறுத்து என்கையிலே தந்தாயாகில் என் பேரன் செய்த உபகாரம்' என்று இருப்பேன் யான்; என் முன்னே பகவானை நிந்தை செய்தாய்; நீ இராஜ்யப் பிரஷ்டனாவாய் ' என்று சபித்து விட்டான்; இதனை இப்படியே பட்டர் அருளிச் செய்தவாறே, பிரகிருதி புருஷ விவேகம் பண்ணியிருக்கின்ற இவன் ஆன்மாவுக்குக் குறைவு வருவது ஒன்றனைச் சபியாமல் இராஜ்யத்திலிருந்து நழுவினவனாய் விழுவாயாக’’ என்று சபிப்பான் என்? என்று கேட்க, நோயைத் தண்டிக்கையாவது, மலத்தை விலக்குகை யன்றோ? சாந்தை விலக்குகை அதற்கு விருப்பம் இல்லாதது அன்றே? ஆகையாங், இவனுக்கு அநிஷ்டம் செய்கையாவது இதுவே யன்றோ?' என்று அருளிச் செய்தார். 169 ஓடி ஓடிப் பல்பி றப்பும் பிறந்துமற் றோர்தெய்வம் பாடி யாடிப் புணிந்து பல்படி கால்வழி ஏறிக்கண்டிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/380&oldid=921152" இலிருந்து மீள்விக்கப்பட்டது