பக்கம்:வைணவ உரைவளம்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

353 வைணவ உரைவளம் கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குரு கூரதனுள் ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.32 (ஒடி ஒடி-சம்சார சாகரத்தில் ஒடி ஒடி; பல்படி கால்-பரம்பரை பரம்பரையாக; கூடிதிரண்டு; ஏத்த-துதித்து; புள்-கருடன்) எம்பெருமான் எல்லாத் தேவர்கட்கும் மேம்பட்டவன்" எனக் கூறும் திருவாய்மொழியில் ஒரு பாசுரம் இது. இதில் ஆழ்வார், வேறு ஒரு தெய்வத்தைப் பாடியும் ஆடியும் வணங்கியும் பலப்பல வகைகளாலே சாத்திரங்கள் கூறிய வழிகளிலே சென்று திரிந்து திரிந்து பல பிறப்பும் பிறந்து அதன் பலன்களைக் கண்டீர்கள்; ஆன பின்பு, தேவர்கள் ஒருங்கு கூடித் துதிக்கும் படியாகத் திருக்குருகர் என்னும் திவ்விய தேசத்திலே, நின்ற திருக்கோலமாய் எழுந்தருளி' யிருக்கின்ற ஆடு புள் கொடியையுடைய ஆதிமூர்த்திக்கு அடிமை புகுங்கள்' என்கின்றார். 'மற்று ஓர் தெய்வம் பாடி ஆடிப் பணிந்து முமுட்சுகள் இதர தெய்வங்களைப் போற்றமாட்டார்கள் என்பதற்குக் காட்டப்பெற்ற அநுஷ்டானம்; ஒருவன்33 பகவானை தி. தியானம் செய்து கொண்டிருக்கையில், இவன் சமாதியிலே நின்ற நிலையை அறிய வேண்டும்' என்று பார்த்துச் சர்வேசுவரன் இந்திரன் வேடத்தை மேற்கொண்டு ஐராவதத்தில் ஏறி வந்து முன்னே நின்று, உனக்கு வேண்டு வது என்?" என்ன, ஒரு புழுவும் தானுமாய் வந்து நிற்கின்ற வன் யார்?' என்றான்; சர்வேசுவரன் பெரிய திருவடியை மேற்கொண்டு வந்தான்" என்னுமிடம் அறியானே 32. திருவாய். 4.10;7 33. ஒருவன்-அம்பரீடன் பாசுரம் : 126-லும் இந்த வரலாறு காட்டப்பெற்றுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/381&oldid=921154" இலிருந்து மீள்விக்கப்பட்டது