பக்கம்:வைணவ உரைவளம்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$60 வைணவ உரைவிளம் என்ன, தேவனும் கோபத்தாலே நெற்றியிற் கண்ணைக் காட்ட, இவரும் காலிலே பல கண்களை உண்டாக்கிக் காட்டினார்’ என்ற சரிதம் இங்கு அது சந்திக்கத் தகும்.கே 'அடிமைப் புகுவதுவே யயாதி சரித்திரத்தைப் பட்டர் வாசித்துக் கொண்டிருக்கும்போது பிள்ளை விழுப் பரையரும் ஆப்பான் திருவழுந்துார் அரையரும், வேதத்தின் பொருளை அறிதற்குக் கருவியாக வெளிப்போந்த பிரபந் தங்களில் இஃது எந்த அர்த்தத்தை விரித்துப் பேசுகின்றது?’ என்று கேட்க, புன்சிறு தெய்வங்கள் தம்மைத்தாமே ஆச்ரயித்துப் பெற்றாலும், பிறர்பக்கல் ஒர் உயர்வு கண்டால் அதுபொறுக்க மாட்டார்கள் என்றும், ஈசுவரனே, "பிறர் வாழ்வு நம்வாழ்வு' என்று நினைத் திருப்பான் என்றும் சொல்லிஆனபின்பு; மற்றைத் தேவர்கள் வணங்கத்தக்கவர் அல்லர், இவன் ஒருவனுமே வணங்கத்தக்கவன் என்னும் அர்த்தத்தைச் செசல்லுகின்றது' என்று அருளிச் செய்தார். இந்த ஐதிகம் அடிமைப் புகுவதுமே" என்ற தொடருக்குப் பொருத்தமானது. இனி, மற்றைத் தேவர்களை அடைவதனால் ஒருவித பயனும் இல்லை என்றாலும் பகவானை அடைந்தவர்க்குப் பலத்தில் தடை உண்டாயிற்றே? என்று எழும் ஐயத்தை நீக்குகின்றார். யாதவர்கள் முடிவிலே வந்தவாறே வாட்கோரையை இட்டு ஒருவரையொருவர் எறிந்து முடித்து போனார்கள் என்று கேட்டவாறே, கிருஷ்ணன் இவர்கள் விஷயமாகச் சங்கநிதி பதுமநிதி தொடக்கமான வற்றைக் கொண்டுவந்து கொடுத்துச் செய்யாதன இல்லை; பின்னையும் முடிவிலே வந்தவாறே இப்படியே யாய் இருந்தது; நாம் பகவானை வணங்குகிற வணக்கத் துக்கும் பலம் அங்ங்னே ஆகின்றதோ? என்று அஞ்சி யிருந்தோம்' என்ன, அங்ங்ண் ஆகாது; அஞ்ச வேண்டா; அவர்கள், இவன் என் தோழன், மைத்துனன்' என்று சரீர 34. இதன் விரிவை அவர் திவ்விய சரிதையை தோக்கி அறிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/383&oldid=921158" இலிருந்து மீள்விக்கப்பட்டது