பக்கம்:வைணவ உரைவளம்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$62 வைணவ உரைவளம் அச்சம், பயிர்ப்பு" என்பன போன்று சொல்லுகின்றே நாயகியினுடைய இலட்சணங்கள் நாயகியும் உடையளாய், இப்படி இருவரும் குறைவற்று இவர்கள் தாமும் தக்க குமரப் பருவத்தையுடையவர்களுமாய் இருக்க, இவர் களைப் புறம்பே கூட்டுவார் ஒருவரும் இன்றிக்கே இருக்க, இவனும் தெய்வாதீனமாக வேட்டைக்கு" என்று புறப்பட, இவளும் பூக்கொய்து விளையாட' என்று உத்தியாவணத் திற்குப் புறப்பட, அவ்விடத்திலே தெய்வம் கூட்டுவிக்க, இருவர்க்கும் கண் கலவி (யாழோர் கூட்டம்) உண்டாக, சிலர் காரணமாக வந்த கலவி அல்லாமையாலே, பிரிவோடே முடிவுற்றுப் பிரிய, குணாதிகர்களாகையாலே இருவருக்கும்" ஆற்றாமை விஞ்சி, ஒருவரை ஒழிய ஒருவர்க்குச் செல்லாமை பிறக்க, இருதலையையும் அழித் தாகிலும் பெறப் பார்ப்பது. 4. தலைமகற்கு அறிவு நிறை ஒர்ப்பு கடைப்பிடி என்பன குணம். அறிவு என்பது, எப்பொருளா யினும் அப்பொருட்கள் நின்று அம்மெய்ம்மையை உணர்வது. நிறை என்பது, காப்பன காத்துக் கடிவன் கடிந்து ஒழுகும் ஒழுக்கம். ஒர்ப்பு என்பது, ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல். கடைப்பிடி என்பது, கொண்ட பொருள் மறவாமை. இனித் தலைமகட்கு நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்பன குணம். நாண் என்பது, பெண்டிற்கு இயல்பாகவே உள்ளதொரு தன்மை. மடம் என்பது, கொளுத்தக்கொண்டு கொண்டது. விடாமை. அச்சம் என்பது, பெண்மையில் தான் காணப்படாததோர் பொருள் கண்டவிடத் து அஞ்சுவது. பயிர்ப்பு என்பது, பயிலாத பொருட் கண் அருவருத்து நிற்கும் நிலைமை-என்பது இறையனார் கள்வியலுரை (நூற்.2). 3. ஆற்றாமை விஞ்சுதல் இரண்டு தலைக்கும் ஒக்குமா யினும் செல்லாமை ஒரு தலைக்கே விஞ்சி இருக்கும் என்று கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/385&oldid=921162" இலிருந்து மீள்விக்கப்பட்டது