பக்கம்:வைணவ உரைவளம்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 363 மடல் ஊர்தல்" என்பதுதான், தலைவியைப் பிரிந்த ஆற்றாமையாலே தலைவன் தலைவியை ஒரு படத்திலே எழுதி வைத்தகண் வாங்காதே அவ்வுருவைப் பார்த்துக் கொண்டு பனை மடலைக் குதிரையாகக் கொண்டு, தலைவியைப் பிரிந்தது தொடங்கிக் கண்ட போக உபகர. ணங்கள் எல்லாம் நெருப்பினாலே கற்பிக்கப்பட்டதாகத் தோற்ற, ஊனும் உறக்கமும் இன்றிக்கே, உடம்பிலே துளி நீரும் ஏறிட்டுக் கொள்ளாதே, தலை மயிரை விரித்துக் கொண்டு திரியா நின்றால், இத்தீயச் செயலைக் கண்ட அரசர் முதலானோர் கெட்டோம் இவனுக்கு ஒரு பெண்ணினிடத்தில் இத்துணை அன்பு இருப்பதே!' என்று. அவர்கள் அவனை அத்தலைவியோடு கூட்டக் கூடுதல்; இல்லையாகில், இதுவே காரணமாக இரண்டு தலையி லுள்ள உறவினர்களும் கைவிட, அலக்குப் போர்' போலே ஒருவர்க்கு ஒருவர் புகலாய் அங்ங்னம் கூடுதல்; தலைவி யானவள் குணங்களாற் சிறந்தவளாயிருப்பாளேயாகில் பழிக்கு அஞ்சி கூடக் கூடுதல். இவை இத்தனையும் இல்லை. யாகில் முடிந்து போதல் செய்கையாகின்ற சாகசமான ஒரு தொழில் விசேடமாயிற்று. இது தன்னை, கடலன்ன காமத்தராகிலும் மாதர் மடலூரார் மற்றையார் மேல்' என்று உயிரின் அளவல்லாதபடி ஆற்றாமை கரைபுரண்டாலும் மகளிர் மடலூரக் கடவர்கள் அல்லர்; நாயகன் தன் ஆற்றாமை யாலே மடல் எடுக்க உலகின்மேல் வைத்துச் சொல்லுவான்: 6. இங்குக் கலித்தொகை நெய்தற்கலியில் 21 முதல் 24 முடியவுள்ள நான்கு பாடல்களையும் அவற்றின் உரைகளையும் படித்து அறிதல் தகும். 7. அலக்குப் போராவது, சேவகர்கள் ஈட்டிகளை ஒன்றோடு ஒன்று எதிர்த்து வைத்தல். 8. தொல். பொருள். அகத்திணை.35, நச்சினார்க் கினியர் உரை மேற்கோள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/386&oldid=921164" இலிருந்து மீள்விக்கப்பட்டது