பக்கம்:வைணவ உரைவளம்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多书4 வைணவ உரைவளம் பின் நான் வரை பாயப் புகா நின்றேன், மடல் எடுக்கப் புகா நின்றேன்’ என்று தோழிக்கு வந்து அறிவிப்பான்: அறிவித்த பின்னரும் அவள் கூட்டிற்றிலளாகில் பின்பு அவன் இது செய்யக்கடவன்; இத்தனையல்லது மகளிர்" மடல் எடுக்கக் கடவர்கள் அல்லர் என்று இங்கனமே ஒரு மரியாதை காட்டினார்கள் தமிழர்கள்: இங்கு அங்கன் அன்றிக்கே, பிராட்டிதான் மடல் எடுப்பதாக இரா நின்றது; தமிழர் மகளிர் மடல் எடுக்கக் கடவர் ஆல்லர்’ என்று சொன்ன இது, சேரும்படி என்? என்னில்; அவர்கள் ஒரு தலையிலேதான் அதனை இசைந்தார்களே, அப்படி இசை கைக்குக் காரணம், ஆற்றாமையே; அவ்வாற்றாமை இருவர்க்கும் ஒத்த பின்பு ஒருவர்க்கு மாத்திரம் ஒதுக்கு வார் யார்? இதற்கு ஒரு மரியாதை காட்டுகையாவது, ஆசைக்கு ஒரு வரம்பு இட்டார்களாமித்தனை. அப்போது பின்னை அரசர் ஆணைக்கு நிற்க வேணும் இன்றேல் வேலியடைத்தால் நிற்க வேணும்' என்று இப்படி நில்லாமல் மகளிர் மடல் எடுப்பதில் ஈடுபடுகையாலும், ஆற்றாமை இரண்டு தலைக்கும் சமம் ஆகையாலும் மகளிர் மடலூரத் தட்டு இல்லை. வரம்பு அழியவாகிலும் முகங் காட்டி வைத்துக் கொண்டு தரிக்க வேண்டும்படியாய் இருப்பது ஒரு விஷயம் புறம்பு இல்லையே; இங்ங்ணம் இருப்பார் சிலரைக் கற்பித்துக் கொண்டார்கள் இத்தனையே." 9. கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் (குறள்-1135) எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல் பொற்புடை நெறிமை இன்மையான (தொல் பொருள்-அகத்திணை.38) 40. மடன்மா பெண்டிர் ஏறார்; ஏறுவர் கடவுளர் தலைவ ராய்வருங் காலை. பனனிரு பாட்டியல்-சூத். 714) இச்சூத்திரத்தால் கடவுளரைத் தலைவராக வைத்துப் பாடுமிடத்து மகளிரும் மடல் ஏறுவர் என்பது பெறப்படுதலைக் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/387&oldid=921167" இலிருந்து மீள்விக்கப்பட்டது