பக்கம்:வைணவ உரைவளம்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 வைணவ உரைவளம் சஏறாளும் இறையோனும் (திருவாய். 4:8) என்ற திருவாய்மொழியில் அவனுக்கு உறுப்பு அல்லாத நானும் என்னுடைமையும் வேண்டா என்று முடித்துக் கொள்ளப் வார்த்த இடத்தில் அது தம் கையது அன்றிக்கே, அவன் உளனாக இஃது அழியாததாய் இருந்தது: இனி அத்தலையே பிடித்து வேர்ப்பற்றோடே அழிக்கப் பார்க்கின்றார்; உண்டாம் போதும் அத்தலையாலே உண்டாய், இல்லை யாம் போதும் ஒன்றும் இல்லையாம்படி அன்றோ வஸ்துவின் சொரூபந்தான் இருப்பது. உயிரினால் குறை இலம்'(4.8:10) என்றார் அங்கு: இங்கு உயிர்க்கு உயிரினால் குறை இலம் என்கின்றார். ஏறு ஆளும் இறையோனும்" என்பதில் அவனுக்கு உறுப்பு அல்லாத நானும் என் னுடைமையும் வேண்டாஎன்றார்: இதில், எனக்கு உறுப்பு அல்லாத அவனும் அவனுடைமையும் வேண்டா என் கின்றார். 'உண்டாம்போதும் அத்தலையாலே உண்டால்" என்ப தற்கு, அவன் சத்தை காரணமாக இத் தலையில் சத்தை உண்டாதலை எங்கே கண்டோம்? என்ன, அதற்குச் சம்வாதம் காட்டுகிறார். இராவணன் மாயா சிரசைக் காட்டினபோது பிராட்டியும் மற்றைப் பெண்கள் மனத் தோடு படாமலே, அழுமாறு போன்று, தன் ஆற்றாமை யாலே கூப்பிட்டு, சத்தையோடே இருந்தாள், இவ் வார்த்ம9த கேட்டபோதே முடியாதிருப்பான் ஏன்?" என்று பட்டரைச் சிலர் கேட்க, ஜீவனத்திற்கும் முடிதலுக்கும் நிமித்தம், ஞான அஞ்ஞானங்கள் அல்ல; அத் தலையில் சத்தையும் அஃது இல்லாமையும் ஆயிற்று; அதற்கு அழிவில் லாமையாலே இருந்தாள்' என்று அருளிச் செய்தார். 171 அன்னைஎன் செயில் என்? ஊரென் சொலில்என்? தோழமீர்! என்னை யினியுமக் காசை யில்லை; அகப்பட்டேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/389&oldid=921171" இலிருந்து மீள்விக்கப்பட்டது