பக்கம்:வைணவ உரைவளம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 0 வைணவ உரைவளம் பட்டால் கிலேசப்பட்டுத்தானே இருக்கவேண்டும்?' என் றாராம். பிறகு வெளியில் எழுந்தருளினபின் நஞ்சீயர் நம்பிள்ளையை நோக்கி 'பார்த்தீரா இவருடைய எண்ணத்தை? என்ன பாசுரம் எடுத்துக் காட்டினார்!' என்று அருளிச் செய்து மகிழ்ந்தாராம். (பாசுரம்-47 காண்க). முன் நடந்ததைப் பின்னர் சொல்வதால் இஃது ஐதிகம். இந்த ஐதிகம் ரஸோக்தியாகவும். வெளிப்படுவ: துண்டு. (பாசுரம்-36 காண்க). இது பாசுரப் பொருளுக் கேற்ப அமையுமாறு சொல்லப்பெறும். இதிகாசம் என்பது, ஒரு வரலாறு, அல்லது கதைபோல் வருவது. தேனுகன் ஆவி போயுகுமாறு கண்ணன் புரிந்த தீரச் செயலும் (பாசுரம்-90), புகர் உருவாகி முனிந்த வனைப் புகழ் வீட’ என்பதற்குப் பெளண்ட்ரக வாசுதேவன் வரலாறு காட்டப் பெறுவதும் (பாசுரம்-31), நின் கோயில் சீய்த்து என்பதற்குத் திருக்கண்ண மங்கையாண்டான் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி காட்டப்பெறுவதும் (பாசுரம்-230), திருக்கடல் மல்லை ஞானப்பிரானைப் பற்றிய செய்தி விளக்கப்பெறுவதுமானவை யாவும் இதிகாசத்தைச் சேர்ந்தவையாகும். இவையும் பாசுரத் தில் வரும் வரலாற்றுக் குறிப்பை விளக்குவனவாக அமையும். சம்வாதம் என்பது, சம்பாஷணை; உரையாடல். எ-டு. *iவின்றி நின்றவர்' என்ற தொடரை விளக்குவதற்கு நம்பிள்ளை நஞ்சீயரிடையே நடை பெற்றதைப் போன்றது. அதாவது, அர்ச்சுனன் தான் எம்பெருமானைப் பெற் றானோ? இல்லையோ?' என்று நம்பிள்ளை நஞ்சீயரைக் கேட்க, அதற்கு அவர் அளித்த மறுமொழி : அர்ச்சுனன் பெற்றானோ? இல்லையோ? என்ற விசாரம் உமக்கு எதற்காக? யார் யார் பெற்றார்கள்? என்று அவர்களை யெல்லாம் ஆராய்ந்து பார்த்தா நாம் பற்ற வேண்டும்? எம்பெருமானுடைய அருளிச் செயல் என்று இவ்வளவே கொண்டு நாம் பற்ற வேண்டுமேயொழிய, பெற்றவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/39&oldid=921173" இலிருந்து மீள்விக்கப்பட்டது