பக்கம்:வைணவ உரைவளம்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 36% கூவிக்கொண்டு - அடியறுத்து அழைத்துக் கொண்டு; அலைகடல்-அலை எறிகின்ற கடல்; ஆழி-சக்கரப்படை, கலை-சேலை: அகல்-அகன்ற; அல்குல்-நிதம்பம்; தலை யில்-தலையால் (வேற்றுமையக்கம்); தைய லார்-மகளிர்1 மகள் பாசுரமே; மடலூர்வதைக் கூறுவதுவே இதுவும். :ஆழ்வார் நாயகி பேசுகின்றாள்: கலையைக் கொண் டிருக்கின்ற அகன்ற அல்குலையுடைய தோழி! வலையிலே என்னையும் அகப்படுத்திச் சிறந்த மனத்தையும் அழைத்துக் கொண்டு அலைகளையுடைய கடலிலே பள்ளிக் கொண் டிருக்கின்ற அம்மானாகிய ஆழிப்பிரான் தன்னை, இந்தப் பெண்களுக்கு முன்பு நம் கண்களாலே கண்டு தலையாலே வணங்கவும் ஆகுங்கொல்லோ?' என்று. தலையில் வணங்கவும் ஆங்கொலோ? : என்றவிடத்து ஈட்டில் சுவைமிக்க ஓர் ஐதிகமுள்ளது. இராசேந்திர சோழன் என்ற இடத்தில் இப்பாசுரத்தைக் கூரத்தாழ்வான் மாலை நேரத்தில் கூடிய சபையொன்றில் உபந்யசித்தருளா நிற்கையில் ஆமருவிகிரை மேய்த்தான் நம்பியார் என்ற பெயர் கொண்ட நூறுவயது நிரம்பிய பெரியார் ஒருவர் நடுநடுங்க எழுந்திருந்து நின், ஆழ்வான்! தலைமகள் தலையாலே வணங்கப் பெறுமோ?’ என்று கேட்க, அதற்கு ஆழ்வான், இதில் என்ன ஐயம்? சிஷ்டாசாரம் காணும்; ரீஜனக ராசன் திருமகள் அதுட்டித்தாள் காணும்' என்று சொல்வி இராமாயண சுலோகம் ஒன்றை" எடுத்து Gústíflua விளக்கினாராம். 17. பூரீராமா. சுந்தர. 38:56 ஈண்டு நானிருந் தின்னுயிர் மாயினும் மீண்டு வந்து பிறந்துதன் மேனியைத் வை.-24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/392&oldid=921178" இலிருந்து மீள்விக்கப்பட்டது