பக்கம்:வைணவ உரைவளம்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H'0 ønsmesurwa 4. augstuaris பிராட்டி பெருமாளைத் தான் தலையாலே வணங்கின. தாகச் சொல்லும்படி திருவடியிடத்துக் கூறியிருக்கின்றான். இங்கே ஒன்று ரஸோக்தியாகச் சிலர் சொல்லுவதுண்டு. பெருமாள் வனவாச காலத்தில் சித்திர கூடத்தில் எழுந் தருளியிருக்கும்போது பாதுகை பெருமாளைப் பிரிந்து வடக்கே சென்றது; பிராட்டி அதற்குப்பிறகு பெருமாளைப் பிரிந்து தெற்கே செல்ல தேர்ந்தது. பெருமாளை விட்டுப் பிரிந்ததென்னுமிடம் பாதுகைக்கும் பிராட்டிக்கும் ஒத்திருத் தாலும், பாதுகை இராஜ்யாபிஷேகம்பெற்று மிகுந்த செல்வ சிறப்பை அநுபவியா நின்றது; பிராட்டி எழுநூறு அரக்கி மார்களிடையே கிடந்து பலவகை இடர்களும் பட நேர்ந்தது. இதனைப் பிராட்டி ஆலோசித்துப் பார்த்தாள். பெருமாளுடைய திருவடி சம்பந்தம் பெற்ற பேறு பாது கைக்கு இருந்ததனாலே அது சிறப்புபெற்றது: தாம்பத்தினி யான முறைமையாலே தந்தையின் கட்டளைப்படிக் கையைப் பிடிக்க நேர்ந்ததனாலே பாதுகைக்குண்டான சிறப்பு தமக்கு வாய்க்கவில்லை; இதுவரை பெருமா ளுடைய திருவடி சம்பந்தம் பெறாத குறைதீர இன்று ஆசாரியர்மூலம் அதனைப்பெற்றிடுவோம் என்று கருதியே வேண்டினாள் தொழுது என்று சொல்லியனுப்பியதாக அறிகின்றோம். 173 இரைக்கும் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னைக் விரைகொள் பொழில்குரு கூர்ச்சட கோபன் சொன்ன (17. தொடர்ச்சி) தீண்ட லாவதோர் தீவினை தீர்வரம் வேண்டி னாள்தொழுது என்று விளம்புவாய் (கம்பரா. சுந்தர. சூளா.33) என்ற கம்பன் வாக்கையும் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/393&oldid=921181" இலிருந்து மீள்விக்கப்பட்டது