பக்கம்:வைணவ உரைவளம்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 373 மகள் பாசுரம் : உருவெளிப்பாடு22 கண்ட தலைவி தாயரை மறுத்துரைக்கும் திருவாய்மொழியிலுள்ள முதற் பாசுரம். இதில் ஆழ்வார் நாயகி, தாய்மார்களே, நீங்கள் என்னைச் சினந்து கொள்வது எப்படி? நம்முடைய அழகிய திருக்குறுங்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை நான் பார்த்த பிறகு, என்னுடைய நெஞ்சமானது, நம்பி யின் திருக்கைகளிலேயுள்ள சங்கோடும் சக்கரத்தோடும் தாமரை போன்ற திருக் கண்களோடும் சிவந்த கோவைக் கனி போன்ற ஒப்பற்றதாயிருக்கின்ற திரு இதழோடும் செல்கின்றது. நான் என் செய்வேன்?' என்கின்றாள். முனிவது... எங்ங்னேயோ : என்று கூட்டி பாவம் அருளிச் செய்கின்றார். புத்திரர்களாகவுமாம், சிஷ்யர் களாகவுமாம், பகவத் விஷயத்தில் ஒர் அடிவர நின்றவர்கள் சிலாகிக்கத் தக்கவர்களத்தனை அன்றோ? இதற்குச் சமவாதம் காட்டுகின்றார். கூரத்தாழ்வார்.2 ஓரளவிலே கங்கையார்24 எம்பெருமான் திருவடியை அடைந்த பிறகு "இன்னமும் ஒரு திருமணம் செய்து கொள்வோமோ என்று ஆராய்ந்து இதுதான் கிரமத்தில் வந்து ஆழ்வானுக்கு"2" விரோதமாகத் தலைக்கட்டும்; இனித் தான் பிரம்மசி சாரியாகவாவது இல்லறத்தானாகவாவது வானப் பிரஸ்தனாகவாவது சந்நியாசியாகவாவது ஒருவன் இருக்க வேண்டும்; ஆபத்து இல்லாத சமயத்தில் ஒருநாள் கூட ஒர் ஆச்ரமத்திலும் சேராதவனாக இருக்கக் கூடாது' என்று 22. உருவெளிப்பாடு - மானச சாட்சாத்தாரம், கண்ணுக்குக் காட்சியாகாமல் நெஞ்சுக்கு நேர் பொருளாகத் தோற்றுவது. இது பிராட்டி நிலைமையில் நின்று பேசுந் திருவாய்மொழி. 23. கூரத்தாழ்வார்-இவர் கூரத்தாழ்வானின் திருத் தந்தையா ர். 24. நங்கையார்-கூரத்தாழ்வாரின் தேவியார். 23. கூரத்தாழ் வான் - கூரத்தாழ் வாரின் திருமகன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/396&oldid=921186" இலிருந்து மீள்விக்கப்பட்டது