பக்கம்:வைணவ உரைவளம்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 வைணவ உர்ைவளம் திற்கு விரோதமாகின்ற காரணத்தால் தாழ்வாம் என்பது சொல்லாமலே போதரும். நீண்டபொன்மேனியொடும் நிறைந்து என்னுள்ளே கின் றொழிந்தான் என்ற விக்கிரக வியாப்திக்கு ஐதிகம் அருளிச் செய்கின்றார் ஈட்டாசிரியர்: * ஒருநாள் கஞ்சியர் கோயிலுக்கு எழுந்தருளா நிற்க, வழியிலே திருக்குருகைப் பிரான்பிள்ளானைக் கண்டு, ஈசுவரனுக்கு ஸ்வரூப வியாப்தி யேயோ உள்ளது, விக்கிரக வியாப்தியும் உண்டோ?" என்று கேட்க, அவரும், சர்வ விஷயமாக ஸ்வருப வியாப்தியே உள்ளது; உபாசக விஷயத்தில், அவர்கள் பற்றுக் கோடாகப் பாவித்த விக்கிரகத்தோடே எழுந்தருளி யிருக்கும். இனி ஸ்வரூப வியாப்திக்குப் பிரமாணம் கண்ட இடம் சாமானிய விஷயமாகின்றது. விக்கிரக வியாப் திக்குப் பிரமாணம் கண்டஇடம் விசேஷ விஷயமாகின்றது" என்று பணித்தாராம், t 76 வந்தருளி யென்னெஞ் சிடங்கொண்ட வானவர் கொழுந்தே, உலகுக்கோர் முந்தைத்தாய் தந்தையே! முழுஎழுலகும் உண்டாய்! செந்தொழிலவர் வேத வேள்விஅறாச் சி.ரீவர மங்கலநகர் அந்தமிழ் புகழாய்! அடியேனை அகற்றேலே' 27. திருவாய். 5. 7:7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/399&oldid=921191" இலிருந்து மீள்விக்கப்பட்டது