பக்கம்:வைணவ உரைவளம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 1 : களைப் பார்த்தன்று காணும். குளிர்ந்த தண்ணிர் கண் டால் அது குடித்து விடாய் தீர்க்கின்றோம்; இது குடித்து யார் யார் தாக விடாய் தீர்ந்தார்கள்? என்று விசாரித்துப் பார்த்தா பருகுகின்றோம்? இல்லையே' என்று அருளிச் செய்தாராம்." இத்தகைய சம்வாதங்களும் பாசுரத்தின் பொருளுக்குப் புதிய ஒளி காட்டுவனவாக இருக்கும். சரீரசரீரிபாவனை : வைணவ தத்துவத்தின் உயிராய கருத்துகளில் இது மிகவும் முக்கியமானது. எம்பெரு மானார் கோஷ்டியிலே உபயவேதாந்தக் கிரந்தங்கள் காலட்சேபம் நடந்து கொண்டிருக்கும்பொழுது ஆன் மாவுக்கு ஞான ஆனந்தங்களும் அடிமையும் நிரூபகமாகச் சொல்லப்பெறுகின்றனவே, இவற்றுள் அந்தரங்கமான நிரூபகம் எது? என்று திருவோலக்கத்தில் ஒர் ஆராய்ச்சி நடந்தது. எம்பெருமானாருக்கு இதுதான் உட்பொருள் என்று நன்கு தெரிந்திருந்தாலும் இதனை ஆசாரியர்மூலம் வெளியிடவேண்டும் எனக் கருதி கூரத்தாழ்வானைத் திருக் கோடியூருக்கு அனுப்பி நம்பியிடமிருந்து இதன் பொரு ளைத் தெரிந்து வருமாறு பணித்தார். ஆழ்வானும் ஆறு மாதங்கள் சேவித்திருந்து கிடைத்தற்கரிய இந்த நிதியைப் பெற்றுவந்தார். அதாவது அடியேன் உள்ளான் உடல் உள்ளான்' (திருவாய் 8.8 : 2) என்பதன் பொருளைத் தெரிந்து வந்தார். ‘அடியேன் செய்யும் விண்ணப்பமே” (திருவிருத் 1) அடியேன் சிறிய ஞானத்தன் (1.5 : 7), *ஒருவன் அடியேன் உள்ளானே' (8, 8 : 1) இந்த இடத்தி லெல்லாம் வெறும் ஆன்மா செயற்பட முடியாதாகையால், அது தேகவிசிஷ்டனான ஆன்மாவையே குறிக்கும். 12. வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று உண்பவோ நீருண் பவர்' என்ற கலிப்பா (கலி-62) அடிகளில் வரும் தலைவன் கூற்றோடு வைத்து இஃது எண்ணத் தகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/40&oldid=921195" இலிருந்து மீள்விக்கப்பட்டது