பக்கம்:வைணவ உரைவளம்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莒貌 வைணவ உரைவனம் செய்து, தாம் இதனை அதுசந்தித்திருந்து பின்பு தாமும் இப்பாசுரத்தை இயல் சொல்லி, இயமம் நியமம் முதலிய கிரமத்தாலே தியானம் செய்யத் தக்க சர்வேசுவரனை மனனம் செய்து புறம்புள்ள பராக்கை அறுத்து அது. சந்திக்கப் புக்காலும் சுக்கான் பரல் போன்று இருக்கக் கூடிய நெஞ்சுகளைப் பதம் செய்யும்படி, தார்மிகரா யிருப்பார்29 இறை சில ஈர ச்சொற்களைப்" பொகட்டுப் போவதே!" என்றருளிச் செய்தார். நஞ்சியர் இவ் வார்த்தையை உருத்தோறும் அருளிச் செய்வர்' என்று அருளிச் செய்வர். வந்தருளி : நான் விரும்பாதிருக்க வந்தருளி. வெவ்வேறு. தீவுகளிலுள்ள வஸ்துக்கள் இரண்டே அன்றோசேர்கின்றன. பரமபத நிலையானவனும், சம்சாரத்தை இருப்பிடமாக வுடையவரும், இந்த இருவருமே அன்றோ கூடுகின்றனர். உத்தேசிய வஸ்து இருந்த இடத்து ஏற இவன்தான் போக வேண்டியவனாக இருக்க, அது பெறாவிட்டால் இருவரும் பாதிப் பாதி வழிதான் வரப் பெற்றார்களோ? வந்தருளி' என்று நெஞ்சுளுக்கிச் (ஈடுபட்டுச்) சொல்லுகிறாரன்றோ? ஆப்பான் திருவழுந்துார் அரையர் கையிலே தாளத்தை வாங்கி வந்தருளி, வந்தருளி..." என்று மேலே போக மாட்டாதே பாடுவராம். ஈடுபாட்டுக்கு இதுவும் ஒரு சம்வாதம் ஆகும். 1ファ ஆரா அமுதே அடியேன் உடலம் கின் பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற கெடுமாலே 29. தார்மிகர்-ஆழ்வார்கள் 30, ஈரச் சொற்கள்பக்திரசமான திருவாய் மொழி முதலிய பிரபந்தங்கள். 31. அருளிச் செய்வர் என்றது. நம்பிள்ளையை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/401&oldid=921199" இலிருந்து மீள்விக்கப்பட்டது