பக்கம்:வைணவ உரைவளம்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 வைணவ உரைவளம் சர்வபெளமனான இராஜாவும் தேவியுமாக முற்றுரட் டாகக்4 குடநீர் வார்த்து ஆக்கும் சோலைபோலே, பெருமாளும்பெரிய பிராட்டியாருங்கூடக் கைதொட்டு ஆக்குமவைக் காண்’ என்று அருளிச் செய்தார். மற்றோர் ஐதிகம் : பிரமாணத்தாலே பிரபத்தி விளையக் கண்ட இடம் உண்டோ? என்ன, அதற்கு ஐதிகம் காட்டுவாராகத் தொடங்குகிறார். பிரமாணத்தை நம்பி னவனுக்கு இங்ங்னமல்லது எண்ணம் இல்லையன்றோ? நல்லான, பட்டர் திருவடிகளை ஆச்ரயித்து நெடுங்காலம் சேவித்து, பின்னர் மரணதசையிலே பட்டர் எழுந்தருளி என் நினைத்திருந்தாய்?" என்ன, அதற்கு அவன், ஒரு சர்வ சக்தி உபகரிக்கும்போது இங்ங் னம் கனக்கவாகாதே உபகரிப்பது" என்று நினைத்திருந்தேன்' என்ன, அதற்குப் பட்டர் அது என், உன்தேசத்தை விட்டு உறவினர்களை விட்டு நெடுந்துரம்போந்து இங்ஙனம் நோவுபட்டுத் திருவடி சேரக் கிடந்தாயாகில் இங்கு உபகாரம் என்?" என்ன, அதற்கு நல்லான், வேறு தேசத்திலே இருந்து பொருள் அல்லாதவனாய் விழுந்துபோகக் கடவனாக இருந்த என்னை இவ்வளவும் அழைப்பித்து, உம்முடைய திருவடிகளை அடையச் செய்து ருசியை விளைப்பித்து, இத் தேசத்திலே உம்முடைய கண் வட்டத்திலே சரீரம் நீங்கும் படி செய்தானே' என்ன, பட்டரும், ஆனாலும், தானாக அபிமானித்த சரீரம் போகாதிற்க, நீ இங்ங்னம் நினைத் திருந்தது என் கொண்டு? என்ன, அதற்கு நல்லான், பிரமாணங் கொண்டு நினைத்திருந்தேன்' என்றான்.4 40. முற்றுாட்டு-பூர்ண அநுபவம் 41. அகவாயிலே இருந்து இசைவித்த சர்வேசுவரன் பிரதம குரு' என்று அருளிச் செய்தார் (எம்பார்)-127வது) பாசுரம் காண்க (திருவாய். 2.3:2) மேலும், ஆசாரிய லாபம் பகவனாலே, (பூரீவசன்.438) என்ற பூர்வசன பூஷ்ண பூர் சூக்தியையும் அதற்கு மணதாள மாமுனிகள் அருளிய சிறப்புரையையும் கண்டு தெளிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/407&oldid=921211" இலிருந்து மீள்விக்கப்பட்டது