பக்கம்:வைணவ உரைவளம்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 385 18O பிறந்தவானும்:42 (அவதாரிகை) அர்ச்சாவதாரங் களிலே தம் அபேட்சிதம் பெற ஆசைப்பட்டவர் அவ்வாசை நிறைவேறப்பெறாமையாலே அவதாரங்களிலே செல்லு கின்றார். இது பொருந்துமோ? விபவாவதாரங்களை இழந்தார்க்கும் இழவு தீரவன்றோ அர்ச்சாவதாரம் அமைந்திரா நின்றது; இங்கே இழந்து வைத்து அங்கே செல்லுகையாகிற இது என்னே! என்னில்: அர்ச்சாவதாரத் தில் குளிர நோக்குதல், வினவுதல், அணைத்தல் செய்ய லாகாதென்று சங்கல்பித்திருக்கையாலே சத்திய சங்கல்ப னுடைய சங்கல்பம் குலையும்படி அதிக நிர்ப்பந்தம் செய்யக் கடவோம் அல்லோம்" என்று அர்ச்சாவதாரத்தில் கையொழிந்தார், விபவாவதாரத்தில் அப்படி ஒரு நிர்ப் பந்தம் இல்லாமையாலும் அக்ரூரன் முதலானார்க்கு ஸர்வஸ்வதானம் பண்ணின படியை அதுசந்திக்கையாலும் அது காலவிப்ரக்குஷ்டம் என்பதிலே புத்தி செலுத்தாமல் அங்கே போருகிறார். இங்கு ஈட்டு ரீசூக்தி ஆழ்வார்கள் எல்லாரும் கிருஷ்ணாவதாரம் என்றவாறே போர மண்டியிருப்பர்கள்; இதற்குக் காரணம் ஏன்?’ என்று பட்டரை (நஞ்சீயர்) கேட்க, (அதற்கு அவர்) ஒருவனுக்கு உண்டான துக்கம் சில நாட்கள் கழிந்தால் பொறுக்கலாம்; அணித்தானால் ஆறி யிருக்கப் போகாதே யன்றோ? அப்படியே, அல்லாத அவதாரங்களைப் போல் அன்றிக்கே, சமகாலமாகையாலே, “ஒரு செவ்வாய் கிழமை43 முற்படப் பெற்றிலோம்; பாவியேன்! பல்லிலே பட்டுத் தெறிப்பதே" என்னும் இழவாலே வயிறெரித்தலேயாயிருக்கும்?' என்று அருளிச் செய்தார். இனித்தான், இராமாவதாரத்தில், தமப்பன் 42. திருவாய். 5,10 43. செவ்வாய்க் கிழமை-செவ்வாயினுடைய சாரம்: 45 நாள் வை.-25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/408&oldid=921213" இலிருந்து மீள்விக்கப்பட்டது