பக்கம்:வைணவ உரைவளம்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 6 வைணவ உரைவளம் சம்பரணைக் கொன்றவனாய், ஏக வீரனாய் இருப்பான் ஒருவன்; பிள்ளைகள்தாம் ஆண் புலிகள்; தடிதானே வன்னியம்44 அறுத்திருப்பதொரு குடி, இவையெல்லாம் மிகையாம்படி, குணத்தாலே நாடுகளை யெல்லாம் ஒரு மார்வு எழுத்தாக்கிக் கொண்டிருப்பர்கள்'; ஆகையால் எதிரிகள் என்ற சொல்லும் இல்லை; இங்கு அங்ங்ன் அன்றிக்கே, தமப்பன் ஒரு சாது விருத்தன்; பிறந்தது கம் சன் சிறைக் கூடத்திலே; வளர்ந்ததும் அவனகத்து அருகே, பூர் பிருந்தாவனத்திலே எழும் பூண்டுகள் அகப்பட அசுரமயமாயிருக்கும்; ரட்சகர்களானவர்கள்'5 ஒர் அடி தாழ நிற்கில் பாம்பின் வாயிலே விழும்படியாயிற்று. இவன்தன் படிகள் இருப்பன; அப்படியானால் வயிறு எரியாதே செய்வது ஏன்? இவர்கள்; அக்காலத்திலே உணர்ந்து நோக்கப் பெற்றிலர்கள், அவ்விழவுக்கு இன்று இருந்து நோவு படுகிறார்கள். அவர்களிலே ஒருவரான இவர் சொல்லும்படியன்றோ இது, தெரிந்துணர்வு என்ற திருப்பாசுரம்: மாயா மிருகத்தின்" பின்னே சென்று இளைத்து மீண்டு எழுந்தருளினபோது அடிசுட்டுப் பொறுக்கமாட்டாமையாலே தழைகளை முறித்துப் பொகட்டு அவற்றிலே நின்று ஆறி எழுந்தருளினார் என்று கேட்டு; பாவியேன்! அன்று உதவி அத்திருவடிகளிலே என .வன்னியம்-குறும்பரான பகைவர்கள் .44 تمدن متمم چ 45. ரட்சகர்' என்றது நம்பி மூத்த பிரானை. 45. தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன் வாளா இருந்தொழிந்தேள் கீழ்நாள்கள் எல்லாம்-கரக்துருவின் அமமானை அந்நான்று பின்தொடர்ந்த ஆழியங்கை அம்மானை ஏத்தாது அன்று. என்பது பெரிய திருவந்தாதி.82. 47. மாயா மிருகம்-மாரீசனாகிய மாய மான் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/409&oldid=921217" இலிருந்து மீள்விக்கப்பட்டது