பக்கம்:வைணவ உரைவளம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வைணவ உரைவளம் ஆனால் ‘அடியேன் உள்ளான் உடல் உள்ளான்' எனற இவ் விடத்தில் மாத்திரம் அடியேன்” என்பதற்கு வெறும் ஆன் மாவே பொருளாக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. எம்பெருமான் சீவான்மாவையும் உடல் பொருளையும் உட்பிரவேசித்திருப்பவன் என்பது பொருளாயிற்று *ஆன்மா' என்பதும் அடியேன்” என்பதும் பரியாயமாயிற்று. என்பதுதேறின பொருள். சரீர.சரீரி பாவனை' இதனால் விளக்கப்படுகின்றது (பாசுரம்-223 காண்க). அகப்பொருள் தத்துவம் : ஆழ்வார் பாசுரங்களில் அமைந்த அகப் பொருள் பாசுரங்கட்கு உரையாசிரியர்கள் சமயச் சார்புபற்றிய அற்புதமான தத்துவ விளக்கங்கள் அருளியுள்ளனர். ஆழ்வார்கள் குறிப்பாக நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் தாமான தன்மையை விட்டும் பிராட்டியாருடைய தன்மையை ஏறிட்டுக் கொண்டும் வேற்று வாயாலே பேசி அநுபவிக்கும் திறம் தோழிப் பாசுரம், தாய்ப் பாசுரம், மகள் பாசுரம் என்று மூன்று வகையாக வடி வெடுக்கும் முறை பாசுரம்-37இல் திருமந்திரத்தின் அடிப் படையில் விளக்கப் பெற்றுள்ளது. தோழிப் பாசுரத்தின் தத்துவ விளக்கம் பாசுரம்-161 இலும், தாய்ப் பாசுரத்தின் தத்துவ விளக்கம் பாசுரம்-191 இலும், மகள் பாசுரத்தின் தத்துவ விளக்கம் பாசுரம்-78லும் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு ஏறிட்டுக் கொண்டு பேசும் காரணமும் தெளி வாக்கப்பெற்றுள்ளது. மேலும் தூதுபற்றிய தத்துவம் பாசுரம்-183 இலும், மடலூர்தல் பற்றிய கருத்து பாசுரம்-170 இலும் விளக்கம் பெற்றுள்ளன. பாசுரங்களின் பிரிவினை: பராசரபட்டர் என்ற சமயப் பேரறிஞர் தாம் அருளியுள்ள திருவாய் மொழித் தனியனில், வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் ஆண்ட தமிழ்மறைகள் ஆயிரமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/41&oldid=921219" இலிருந்து மீள்விக்கப்பட்டது