பக்கம்:வைணவ உரைவளம்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 வைணவ உரைவளம் |கள்ளவேடம்-புத்தர் வேடம்; புரம்-திரிபுரம்: கலந்து-செறிந்து; உள்ள பேதம்-மன வேறு பாடு; உபாயம்-விர கு; வேறு அலாமை.-- வேறுபாடின்றி:உள்குடைத்து-அவகாகித்து; உயிர்-ஆன்மா; உருக்கி-நீர்ப்பண்டமாக்கி; ஆழ்வார் தாம் எம்பெருமானைச் சேர்ந்து அநுபவிக் கும் நிலையைச் செய்யுமாறு அவனை வேண்டும் திருவாய் மொழியில் ஒரு பாசுரம் இது. ஆழ்வார் இதில், வஞ்சனை பொருந்திய வேடத்தைக் கொண்டு சென்று திரிபுரத்திலே புகுந்த விதமும், அங்குள்ள அசுரர்களோடு கலந்து அவர் களுடைய மனங்களை வேறுபடுத்தி உயிர்களைப் போக்கிய உபாயங்களும், கங்கையைத் தரித்த சடையையுடைய சிவ பிரானும் உன் பக்கம் வேறு அல்லாதபடி விளங்க நின்றதும் என் மனத்திற்குள்ளே புக்கு என் உயிரை உருக்கி முடிக் கின்றன" என்கின்றார். கள்ள வேடத்தை... உபாயங்களும் : இதில் பெளத்தாவ தாரக் கதை அடங்கியுள்ளது. அக்கதை வருமாறு: சில அசுரர்கள் சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்தனர்; அப்போது சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி, "உங்கட்கு வேண்டியதென்ன?’ என்று கேட்க, அவர்களும் ஒருவராலும் வெல்ல முடியாத மூன்று பட்டணங்கள் எங்கட்கு வேண்டும்' என்றனர். அதற்குச் சிவபிரான் அப்படியே உண்டாகுக; அந்தப் பட்டணங்கள் மூன்றும் ஒன்றோடொன்று கூடாமல் திரியக் கடவன்; மூன்றும் ஓரி டத்தில் கூடும்பொழுது உங்கட்கு பேராபத்து விளையும்; பேணிக் கொள்ளுங்கள்' என்று கூறி மறைந்து போயினன். பின்பு இரும்பு, வெள்ளி, பொன் இவற்றாலான மூன்று பட்டணங்கள் தனித்தனியே உண்டாயின. அசுரர்கள் அவற்றிலிருந்து கொண்டு தேவர்களையும், அவர்களை நோக்கி வேள்வியியற்றும் அந்தணர்களையும் பலவாறு நலிந்து கொண்டிருந்தனர். வேள்வி முதலியன நடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/411&oldid=921223" இலிருந்து மீள்விக்கப்பட்டது