பக்கம்:வைணவ உரைவளம்.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 389 பெறாததனால் அவிசு கிடைக்காமற் போகவே தேவர் கட்கு வலியொடுங்கிற்று; மிகவும் சிரமம் ஏற்பட்டது. பிறகு நான்முகன் முதலியோர் அனைவரும் கூடிச் சிவனிடம் சென்று பெருமானே, எங்கட்கு அவிசு இல்லா தொழிந்தது. வேள்வி நடத்துகின்ற ஊர்களிலே அசுரர்கள் அப்பட்டணங் களுடன் சென்று நலிகின்றனர்; இத்துன்பம் பொறுக்க முடியாதிருத்தலால் அவர்களை உடனே அழித்தொழிக்க வேண்டும்' என்று வேண்டினர். அதற்குச் சிவபெருமான் *நச்சு மரமாகிலும் நட்ட மரங்களை வெட்டுவாருண்டோ? அவர்களை ஒழிக்க என்னலாகாது" என்று கூறி விட்டார். பிறகு அனைவரும் கூடி திருப்பாற்கடலை அடைந்து பாலாழி எம்பெருமானைக் கண்டு அவளிடம் தங்கள் கோரிக்கையினை எடுத்துரைத்தனர். திருமால், நீங்கள் எல்லோரும் சேர்ந்து அவர்களை ஒழிக்கலாகாதோ?’ என்று கேட்க, அதற்கு அவர்கள், எம்பெருமானே, அந்த அசுரர்கள் சில தர்மங்களை அநுட்டிப்பது, சில வேள்வி களை இயற்றுவது என்பது போன்ற சில நற்செயல்களையும் புரிகின்றார்களாதலின் அவர்களை எங்களால் வெல்ல முடியாது’ என்றனர். உடனே திருமால், ஆனால் நான் அவர்களை ஒழிக்கின்றேன். நீங்கள் உம் இருப்பிடம் சேர்வீர்களாக" என்று விடை கொடுத்தனுப்பிவிட்டு தான் ஒரு பெளத்த கிழவனாக வேடம் பூண்டு ஓர் ஏட்டுச் சுவடியைக் கட்கத்தில் இடுக்கிக் கொண்டு பவித்திரம் அணிந்து கொண்டு அவ்வசுரர்களின் பட்டணங்களுக்குச் சென்று பரமதார்மீகனென்று அனைவரும் கருதும்படியாக நடந்து வந்தான்; அப்போது அவர்கள் ஒரு வேள்வி இயற்றத் தொடங்கினர். காஷ்டம், அவிசு முதலியன சேமித்து வைத்திருந்தனர். கள்ள வேடத் திருமால் அங்குச் சென்று, இந்த சமித்துகள் எதற்கு?’ என்று கேட்க, அவர்கள், ஓமம் பண்ணுவதற்கு" என்று விடை யிறுத்தனர். திருமால், ஐயோ காஷ்டம் தின்னப் பிறப்பதிற்காட்டிலும் புல்லைத் தின்று பசுவாய்ப் பிறப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/412&oldid=921225" இலிருந்து மீள்விக்கப்பட்டது