பக்கம்:வைணவ உரைவளம்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 வைணவ உரைவளம் யாம்படி இவற்றை வெளுப்பித்தபடி,பார்த் தருள வேண்டும்" என்று காட்ட, கண்டு போரஉகந்தருளி எம்பெருமானாரை அருளப்பாடிட்டு, இவனுக்காக, கம்சனுடைய ஈாங் கொல்லி (வண்ணான்) நம் திறத்திற் செய்த குற்றம் பொருத்தோம்’ என்று திருவுள்ளமானார், ஆறாம் பத்து 能8剑 வைகல் பூங்கழிவாய்' இது மகள் பாசுரமாக அமைந்தது. மயர்வற மதிநலம் அருளப்பெற்ற நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் தூதுவிடும் பதிகங்கள் நான்கு உள்ளன. இவை யாவும் மகள் பாசுர மாகவே அமையும். துரது விடுபவள் தலைவியேயன்றோ? *அஞ்சிறைய மடநாரய் (1.4) - இது வியூகத்தில் தூது: பொன்னுலகாளிரோ' (6.8)-இது பரத்துவ, அந்தர் யாமித்துவத்தில் தூது; எங்கானல் அகங்கழிவாய' (9.7)-இஃது அர்ச்சையில் தூது; வைகல் பூங்கழிவாய்" (6.1)-இது விபவத்தில் தூது என்பதாக அறுதியிடப்பெற். இறுள்ளது. மணவாளமாமுனிகள் தம் நூற்றந் தாதியில் வைகல் திருவண் வண்டுர்ஆவைகும் இராமனுக்கு (61) என்று அருளிச் செய்ததும் இது கருதியே. திருவண் வண்டுரில் துTது விடுகின்றபடியால் இஃது அர்ச்சாவதாரத்தில் தூது" என்று கொள்ளலாமோ என் னில்; இத்திருவாய்மொழியின் பாசுரம் ஒன்றில், மாறில் போரரக் கன்மதிள் ெேரழச் செற்றுகழ்ந்த 'ஏறு சேவக னார்க்கென்னை யும் உளள் என் மின்களே" (1 ) 1. திருவாய். 6.1. (அவதாரிகை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/417&oldid=921232" இலிருந்து மீள்விக்கப்பட்டது