பக்கம்:வைணவ உரைவளம்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 395 என்று அமைந்திருக்கும் படியை நோக்கியும், அர்ச்சாவ தாரப் பதிகம் வேறொன்று (9.7) இருப்பதை நோக்கியும் ஆசாரியர்கள் இதனை விபவாவதாரத்தில் தூது’ என வகை செய்தது மிகவும் பொருத்தம் என்பது போதரும். ஆழ்வார் திருமொழிகளில் அவர்கள் தாமான தன்மையை விட்டுப் பிராட்டியாரின் நிலையை ஏறிட்டுக் கொண்டு பாசுரங்கள் அமைக்கப்பெற்றிருக்கும். பெரும் பாலும் ஆழ்வார் நாயகிகள் புள்ளினங்களையே துரது போக்குவர். குருகினங்கள், நாரைகள், அன்னங்கள், பூங்குயில்கள், கிளி, மயில், பூவை, அன்றில்கள், வண்டினங்கள் முதலியவை தூதுவிடும் பொருளாக அமைந் திருப்பதைக் காணலாம். இவற்றைத் தவிர, வாடை மேகம் நெஞ்சு போன்றவையும் இவர்கள் பாசுரங்களில் தூதுப் பொருள்களாக அமைந்திருப்பதையும் கண்டு மகிழ லாம். இங்ங்ணம் பறவைகளைத் தூது விடுவதற்கு உட் பொருள் உண்டு. ஆசாரிய ஹிருதயம்' என்னும் நூல். "சோப்பாரைப் பட்சிகளாக்கி ஜ்ஞா கர்மங்களைச் சிறகு என்று, குரு ஸ்ப்ரமசாரி புத்ர ரஷ்ய ஸ்தாகே பேசும்’ (ஸ்ப்ரமசாரி-ஒரு சாலை மாணாக்கர்; ஸ்தாநே இடத்தில்) என்று குறிப்பிடும். விண்ணோர் பிரானார், மாசுஇல் மலரடிக்கீழ் எம்மைச் சேர் விக்கும் வண்டுகளே' என்று: ஆழ்வாரே அருளிச் செய்துள்ளமையால் பகவத்விஷயத்தில் கொண்டு சேர்க்குமவர்கள் பறவைகளாகக் கொள்ளப் பெறுவர். இரண்டு சிறகுகளைக் கொண்டு பறவைகட்கு எங்ங்ணம் விசும்பில் பறந்து செல்லுதல் இயலுகின்றதோ, 2. ஆசா-ஹறிரு-150 3, திருவிருத்-55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/418&oldid=921233" இலிருந்து மீள்விக்கப்பட்டது