பக்கம்:வைணவ உரைவளம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் 13 என்று சொல்லியிருப்பதனால் திருவாய்மொழி ஆயிரமும் திருவரங்க நாதன் மீதாகும் என்று ஏற்படுகின்றது. இந்த ஐதிகம் எப்படிப் பொருந்தும்? திருவாய்மொழி ஆயிரத்தில் பலபல திவ்விய தேசங்களன்றோ அநுபவிக்கப் பெற் றுள்ளன? அவற்றுள் கங்குலும் பகலும் (7.2) என்ற திருவாய் மொழியொன்றே அரங்கநாதன் விஷயமாகக் காணப்படா நிற்க, பட்டர் ஆயிரமும் அரங்கநாதன் மீதாவது ஆகும் என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? என்று முன்பே சிலர் கேட்டார்களாம். அதற்கு மறுமொழி பகர்ந்தவர்கள் ' கங்குலும் பகலும் என்ற பதிகத்தின் முடிவில் முகில் வண்ணன் அடிமேல் சொன்னசொல் மாலை ஆயிரத்திப்பத்தும்’ என்கையாலே திருவாய்மொழி ஆயிரமும் அரங்கநாதன் திருவடிகளுக்கே சமர்ப்பிக்கப்பெற்றது; அதிலிருந்து சில திவ்விய தேசங்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப் பட்டது; ஆனது பற்றியே 'திருவேங்கடத்துக் கிவைபத்தும்' (திருவாய் 6. 10: 11) என்றும், திருமோகூர்க்கு ஈர்த்த பத்திவை' (டிெ 10, 1: 11) என்றும், இவை பத்தும் திருக்குறுங்குடி அதன் மேல் (டிெ 5, 5: 11) என்றும் ஆழ்வாரே அருளிச் செய்துள்ளார்' என்றார்களாம். இப்படியிருக்கும் போது இந்த ஐதிகம் அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டியதா கின்றது (பாசுரம்-241 காண்க). எம்பெருமான் சிலவற்றுடன் ஒப்பு : உரையாசிரியர்கள் எம்பெருமானை யானை, நீர், மேகம், இரத்தினம், நிதிஆகியவற்றுடன் ஒப்பிட்டு விளக்கியுள்ளார். இவை மிகவுக அற்புதமாக உள்ளத்தைத் தொடும் விளக்கங்களாம் அமைந்துள்ளன. இவை முறையே; பாசுரங்கள் 58, 104, 86, 195 ஆகியவற்றில் விளக்கம் பெறுகின்றன. சம்பிரதாயப் பெயர்கள் : வைணவ உரையில் சில பெரியோர்களின் இயற்பெயர்கள் சம்பிரதாயமாக மாறி வழங்கப்பெறும். அநுமன் சிறிய திருவடி யென்றும், கருடன் பெரிய திருவடி என்றும், ஆதிசேடன் அனந்தாழ் வான்' என்றும், இலக்குவன் இளைய பெருமாள்' என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/42&oldid=921235" இலிருந்து மீள்விக்கப்பட்டது