பக்கம்:வைணவ உரைவளம்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 39富 கைகொள் சக்கரத்தென் கணிவாய் மானைக் கண்டு கைகொள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே." tவைகல்- எப்போதும்; பூ-அழகிய; கழிவாய்நீர்நிலம்; செய் கொள்-கழனி நிரம்பிய; கனிவாய்-கனிபோன்ற இதழ்; கண்டுநேரில் பார்த்து; வினையாட்டியேன்.-பாவ முடையவனான என்னுடைய) மகள் பாசுரம். பறவைகளைத் துரதுவிடும் திருவாய் மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார் நாயகி, :அழகிய உப்பங்கழிகளிலே நாடோறும் வந்து மேய்கின்ற கூட்டமான குருகுகளே! வயல்களிலே நிறைந்திருக்கின்ற செந்நெற் பயிர்கள் ஓங்கி வளர்கின்ற திருவண் வண்டுர்’ என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற, திருக் கரத்திலே கொண்டிருக்கின்ற சக்கரத்தையும் கோவைக் கனி போன்ற வாயினையுமுடைய எம்பெருமானைக் கண்டு வினையேனுடைய காதலின் தன்மையைக் கைகூப்பி வணங்கிச் சொல்லுங்கள்' என்கின்றாள். உள்ளுறை : எல்லாக் காலங்களிலும் இன்பம் நுகரும் இடங்கட்குத் தாங்களே சென்று தங்களைப் பிரியில் தரியாத அன்புடைய சீடர்களுடனே கூடப் பகவானுடைய குணங்களை அதுபவம் பண்ணுகின்ற துய்மையான இயல் புடைய ஆசாரியர் ஒருவரை விளித்துத் தனக்கு இறைவ னோடு சம்பந்தம் வேண்டும் என்று அடிபணிந்து கேட்டல் இதற்கு உள்ளுறையாகும்." 6. திருவாய் 6.1:1 7. மலைநாட்டுத் திருப்பதிகளில் ஒன்று. 8. ஆசா. ஹிரு. 154-ல் இந்த உள்ளுறையின் விரிவு காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/420&oldid=921236" இலிருந்து மீள்விக்கப்பட்டது