பக்கம்:வைணவ உரைவளம்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

事00 வைணவ உரைவளம் 186 குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மமொன் றில்லை பழகியாம் இருப்போம் பரமேஇத் திருவருள்கள் அழகி யாரிவ் வுலகுமூன் றுக்கும் தேவி மைதகு வார்ப லருளர் கழகம்ஏறேல் நமபீ! உனக்கும்.இளை தேகன்மமே.”* (குழகி-லீலா ரசம் கொண்டாடி; குழமணன்மரப்பாச்சி; கோயின்மை - கேட்பாரற்ற செயல்கள்; கன்மம்-காரியம்; திருஅருள்கள் -ஆசைப் பெருக்கான காரியங்கள்; அழகி யார்-அழகிற் சிறந்தவாகள்; தேவிமைதேவிகளாக இருக்கும் தனமை; கழகம்திரள், கூட்டம்; கன்மம்-செய்கை; இளைதே. -இளமைப் பருவத்திற்குரியது! 'மகள் பாசுரம்': தலைவன் தாழ்த்து வரககண்ட தலைவி ஊடல் கொண்டுரைத்தலாகிய திருவாய்மொழியில் ஒரு பாசுரம். வசீகரித்தற்குரிய செயல்களைச் செய்து எங்களு டைய குழமணனை எடுத்துக்கொண்டு மேன்மை தோன்றப் பேசுவதனால் ஒரு பயனும் இல்லை; நாங்கள் முன்னரே இவற்றில் பழகி இருக்கின்றோம்; நீ செய்கின்ற இந்தத் திருவருள்கள் எங்கள் அளவேயோ! இந்த மூன்று உலகங் கட்கும் உம்மோடு தக்க முடிசூடத் தக்கவர்களாகிய அழகினையுடையவர்கள் பலர் உணர்; நம்யி! எங்கள் கட்டத்தில் ஏறாதே; உனக்கும் இஃது இளமைப் பருவத்திற் குரிய செயலேயாம்' என்கின்றாள் பராங்குச நாயகி. 'கழகம் ஏறேல் கம்பீ' : நீ எத்தனை பேரைத் தீண்டி வந்திருப்பாயோ தெரியாது; மேல் விழுந்து தீண்டாதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/423&oldid=921239" இலிருந்து மீள்விக்கப்பட்டது