பக்கம்:வைணவ உரைவளம்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 401 கொள் என்றவாறு. இவர்கள் கழகம் ஏறேல்' என்ற வாறே அவன் செயலற்றவனாய் நின்படியை அநுசந்தித்துப் பட்டர் ஈடுபட்ட படியைக் காட்டுகின்றார்; இவ்விடத்தே பட்டர் அருளிச் செய்வது ஒருவார்த்தை உண்டு. அதாவது, சமஸ்த கல்யாண குணாத்மகனாய் உபய விபூதி யுக்தனாய் சர்வாதிகனாய் சர்வ கியந்தாவா யிருக்கின்ற சர்வேசுவரன் நான்கு இடைப் பெண்கள் இருந்த இடத்தே புக்கு அல்லது நிற்க மாட்டாத செல்லாமை விளைய, அவர்கள், நீ இங்குப் புகுதாராய் கொல்?" என்ன, விலங்கு இட்டாள போலே பேரவும் திரியவும் மாட்டாதே தடுமாறி நின்றான் என்கிற செளசீல்யம் தங்களையும் இவர்களையும் ஒழிய ஆர் அறிந்து கொண்டாட வியாசர் முதலாயினோர் எழுதி வைத்துப் போனார்களோ?' என்று அருளிச் செய்வர். எல்லாரையும் நியமிக்கிற சர்வேசுவரன் சிலரால் நியமிக்கும்படி எளியனானான் என்றால், இது மெய்" என்று கைக்கொள்ளுவாரைக் காண முடியாதன்றோ? சாஸ்திரங்கள் எல்லாம் நியமிக்கிறவன் நியமிக்கப்படுகிற வர்கள் என்று பாகுபடுத்தி ஒருங்க விடா நிற்க, அத்தலை இத்தலையாகச் சொல்லுகின்றதன்றோ இது!" 137 பிணக்கி யாவையும் யாவரும்பிழை யாமல பேதித்தும் பேதி யாதது,ஓர் கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தியினாய், இனக்கி யெம்மையெங் தோழி மார்வினை யாடப் போதுமின் என்னப் போந்தோமை உனக்கி வேளைத்தால் என்சொலார் உக வாதவரே! 14 13. சர்வநியந்தா-எல்லாரையும் நியமிக்கிறவன். 14. திருவாய். 6.2:8 வை.-26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/424&oldid=921240" இலிருந்து மீள்விக்கப்பட்டது