பக்கம்:வைணவ உரைவளம்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 02 வைணவ உரைவளம்

பிணக்கி-ஒன்றாகச் சேர்த்து; பிழையாமல்மாறிப் போகாதபடி; தேவயோகி-விலங்கு யோனி முதலிய பேதங்களைப் பண்ணின இடத்தும்; பேதியாதது- அவற்றின் கண் உள்ள குற்றங்கள் சொரூபத்திற்குச் சேதம் வராதபடியான; ஒர் கணக்கில்-ஒப்பற்ற எல்லையில்லாத; ஞானம்-சங்கல்ப ரூப ஞானம்; இணக்கி-இசைவித்து; உணக்கி -- நெருக்கி; வளைத்தால்-தகைந்தால்; உகவா தவர்-வேண்டாதவர்;

தலைவன் காலம் தாழ்த்துவரக் கண்ட தலைவி ஊடல் கொண்டு உரைப்பதாக அமைந்த திருவாய்மொழி யில் ஒரு பாசுரம். 'அழிக்குங் காலத்தில் அசேதநங்களை யும் சேதநங்களையும் ஒன்றாகச் சேர்த்து, பின், படைக்குங் காலத்தில் ஒர் ஆன்மாவின் கர்ம பலத்தை மற்றோர் ஆன்மா அநுபவியாதபடி படைத்தும், வேறுபடாததாகிய ஒப்பற்ற எல்லையில்லாத கீர்த்தி வெள்ளத்தினையுடைய கதிர் ஞானத்தினையே திருமேனியாக உடையவனே! எம் தோழிமார் எம்மை இசையச் செய்து விளையாடுவதற்கு வாருங்கோள் என்ன, வந்த எங்களைத் துவளச் செய்து நீ வளைத்தால் விருப்பமில்லாதவர்கள் என்ன சொல்ல மாட்டார்கள்?' என்கின்றாள் ஆழ்வார் நாயகி. "உனக்கி நீ வளைத்தால் : இதனைத் திருவுள்ளம் பற்றி இவன் அவர்களை வளைத்துக் கிடக்கும்போது இவன் மிறுக்கு காரணமாக அவர்கள் போகப் புக்கார்க ளாக வேண்டும் என்று கூறும் முகத்தால் இவ்வாறு கூறுவர். ஒட்டி நின்று இவர்களைச் சில மிறுக்குகளைச் செய்யப் புக்கான்; இங்கே இருக்கில் அன்றோ இவை எல்லாம் செய்வது என்று பார்த்து, ஒருவர் ஒருவராகப் போகப் புக்கார்கள்; இதுவோ பார்த்தபடி!' என்று வழியைப் سسسس----------------------سمس---------------------س--سسسسسسسسسسس--سسه 15. மிறு க்குகள்-நிஷ்டுரமான வார்த்தைகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/425&oldid=921241" இலிருந்து மீள்விக்கப்பட்டது