பக்கம்:வைணவ உரைவளம்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 4.09 ஆறி அடங்கியிருத்தல் பிராப்தம் என்று அத்தியவசாயம் செல்லுகின்றமை ஒரு பக்கத்திலும் ஆக இவ்விரண்டும் கலந்து பரிமாறுகின்றமை இங்கு இத் திருவாய்மொழியில் தெரிகின்றது. திருமங்கையாழ்வாருடைய கேள்வன் கொல்' என்ற திருமொழி ஒருபுடை இத்திருவாய் மொழியோடு ஒத்திருக்கும். வயலாளி மணவாளன் பரகால நாயகியின் கையைப் பிடித்துக் கொண்டு போகின்றபடியைக் கண்ணா லே கண்டு தாய் சொல்வதாக அமைந்தது அங்கு. இங்கு அவ்வாறின்றி மகளுடைய தனிப்போக்கைத் தாய் சொல் வதாக அமைந்துள்ளது. ஆளவந்தார்கோஷ்டியில் உண்ணும்சோற்றில் திருவாய் 6. 7, பிராட்டிக்கு அஞ்சவேண்டுவது அதிகமோ, கள்வன் கொல்லில் ( பரிதிரு 3.7) பிராட்டிக்கு அஞ்ச வேண்டுவது அதிகமோ? என்று ஆய்வு நிகழ்ந்ததாம். உண்ணும் சோற்றில் மகள் தனியே போனமை. சொல்லுகின்றது; கேள்வன் கொல்லில் இருவராய்ப் போனமை சொல்லு கின்றது. இருவராய்ப் போனவர்களுக்கு வயிறெரிய வேண்டுவது அத்தனை அவசியமன்றே; தனியே போன வளுக்கன்றோ அதிகம் வயிறெரிய வேண்டுவது' என்று அங்கிருந்த முதலிகள் சிலர் சொன்னார்களாம். அப்போது ஆளவந்தார், அங்ங்ணன்று காண்மின்; தனியே போன வளைப்பற்றி ஒரு பயமும் இல்லை; இருவராய்ப் போன விடத்தின்குத்தான் வயிறெரிய வேண்டும்' என்று அருளிச் செய்தாராம். இதன்கருத்து: தனியே போனவன் தன்னுடைய இலட்சியமான இடத்திற்கு அபாயமின்றிச் சென்று சேர்ந்திடுவாள். இருவரும் ஒருவருக் கொருவர் வியாமோகத்திற்கு ஊற்றுவாயாகயாலே ஒருவரால் ஒருவர் மயங்கி விழுந்து என்னாகுமோ? என்று வயிறெரிய வேண்டிற்றாகும் என்பதாம். T26 பொ. இரு 3.7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/432&oldid=921249" இலிருந்து மீள்விக்கப்பட்டது